Showing posts with label Mind Relax. Show all posts
Showing posts with label Mind Relax. Show all posts

Thursday, April 9, 2009

EASY V/s DIFFICULT

Easy is to judge the mistakes of others - Difficult is to recognize our own mistakes

Easy is to talk without thinking - Difficult is to refrain the tongue

Easy is to hurt someone who loves us. - Difficult is to heal the wound...

Easy is to forgive others - Difficult is to ask for forgiveness

Easy is to set rules. - Difficult is to follow them.

Easy is to dream every night. - Difficult is to fight for a dream.

Easy is to show victory. - Difficult is to assume defeat with dignity...

Easy is to admire a full moon. - Difficult to see the other side...

Easy is to stumble with a stone. - Difficult is to get up...

Easy is to enjoy life every day. - Difficult to give its real value...

Easy is to promise something to someone.- Difficult is to fulfill that promise...

Easy is to say we love. - Difficult is to show it every day...

Easy is to criticize others. - Difficult is to improve oneself...

Easy is to make mistakes. - Difficult is to learn from them...

Easy is to weep for a lost love. - Difficult is to take care of it so not to lose it.

Easy is to think about improving. - Difficult is to stop thinking it and put it into action...

Easy is to think bad of others - Difficult is to give them the benefit of the doubt...

Easy is to receive - Difficult is to give

Easy to read this - Difficult to follow

Easy is keep the friendship with words - Difficult is to keep it with meanings.

Wednesday, April 1, 2009

நம் வாழ்க்கை நம் கையில்

யதான ஒரு மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்கவேண்டும் என்பது அவர் திட்டம்!

முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல.. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்! சில விநாடிகள் யோசித்தவர், ‘‘எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?’’ என்று பணிவோடு கேட்டார்.

மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழுஈடுபாட்டோடு அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோதானோவென்று வீடு கட்டினார். ‘வேலையிலிருந்தே ஓய்வு பெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது’ என்கிற அலட்சிய மனப்பாங்கு!

வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பார்வையிட வந்தார் முதலாளி. வாசலிலேயே வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச் சாவியை எடுத்து நீட்டினார். ‘‘இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி!’’ என்றார் முதலாளி.

மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை. ‘என்ன கொடுமை இது! இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், இன்னும் மூளையை கசக்கி எப்படியெல்லாமோ டிசைன் டிசைனாக கட்டியிருப்பேனே.. இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன்படுத்தியிருப்பேனே! சே! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே..’ என்று மனதுக்குள் ஏகமாக புழுங்கினார்.

பல சந்தர்ப்பங்களில் நமது புழுக்கம்கூட இந்த ரகத்தில்தான் இருக்கிறது. நமக்கான வாழ்க்கையை நாம்தான் நிர்மாணிக்கிறோம் என்பதை அறியாமல், பல சந்தர்ப்பங்களில் நம் திறமையில் மிகவும் கொஞ்சம் மட்டுமே பயன்படுத்துகிறோம். பிறகு, அப்படி உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழவேண்டிய சூழல் வரும்போது, அதிர்ச்சி அடைகிறோம்! ‘இப்படி ஆகும்னு தெரியாம போயிடுச்சே..’ என்று மனம் புழுங்குகிறோம்.

நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி. ஒவ்வொரு நாளும், ஒரு சுவர் எழுப்புகிறோம். ஆணி அடிக்கிறோம்.. ஜன்னல் பொருத்துகிறோம். நம் மனப்போக்கும், அர்ப்பணிப்பும், நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்தும் விஷயங்களும்தான் நாளை நாம் வாழப் போகும் வாழ்க்கை எனும் வீட்டின் தரத்தை நிர்ணயிக்கின்றன.

ஒவ்வொரு அடியுமே உன்னதமாக வைப்போம். எந்த அடி திருப்புமுனை தரும் என்பது யாருக்குத் தெரியும்?!
Thanks:MALLIGAI MAGAL

Friday, March 20, 2009

நிராகரிக்கப்படும் என்ற அச்சமின்றி நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்!

நீங்கள் விரும்புவதைக் கேட்டுப் பெறக்கூடிய திறமையும், நீங்கள் விரும்புவதைப் பெறமுடியும் என்கிற நம்பிக்கையும் இருந்தால் இந்த உலகம் உங்களுக்கு வேண்டியவற்றைப் பெற்றுத் தரும். சில மனிதர்கள் உண்மையிலேயே கேட்பதிலும், அவர்கள் விரும்புவதைப் பெறுவதிலும் புத்திசாலிகள். ஏனென்றால் அவர்களால் அது முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதிர்ஷ்டத்திற்கு இதில் சிறு பங்குதான் என்றாலும், மற்றவர்கள் இவர்களை மிகவும் அதிர்ஷ்டசாலிகளாகத்தான் பார்ப்பார்கள்.

சுய-பரிணாமத்திற்கான உபகரணங்களில் மிக முக்கியமானது தான் விரும்புவதைக் கேட்கக்கூடிய ஆற்றல். பலர் தாங்கள் விரும்பும் அல்லது தங்களுக்குத் தேவைப்படும் பொருட்களை எப்படி கேட்பது என்று தெரியாததால் பின் தங்கி விட்டார்கள். அவர்கள் தகவல்கள், வழி, உதவி, புதிய கண்டுபிடிப்புக்கான பண உதவி மற்றும் ஊதிய உயர்வு மூலம் சிறந்த வாழ்க்கை ஆகியவற்றை கேட்டுப் பெற பயந்தவர்கள். அவர்கள் முட்டாள்களாகவோ, தேவை உடையவர்களாகவோ பார்க்கப்பட்டு விடுவோமோ என்ற உணர்வால் தடுக்கப்பட்டவர்கள். ஆனால் நீங்கள் விரும்புவது ஒரு முத்தம், அரவணைப்பு, அடுத்தவரின் பொன்னான நேரம், கவனிப்பு மற்றும் நம்பிக்கையானவர் என்று எதுவாக இருந்தாலும், தேவையென்று நீங்கள் நினைத்தால் கேளுங்கள்.

எது எப்படி இருந்தாலும், கேட்க வேண்டும் என்ற நிலை வரும்போது நம்முள் எழும் மிகப் பெரிய கேள்வி நீ கேட்பாயா?! என்பதுதான். மற்றவர்கள் நம்மைப் பற்றி இப்படித்தான் நினைத்து வைத்திருப்பர் என்று ஒரு பொழுதும் முடிவு செய்யாதீர்கள். அவர்கள் உங்கள் எண்ணங்களை தானாகப் படித்து வேண்டியதைக் கொடுப்பார்கள் என்றும் உறுதி செய்யாதீர்கள். எப்பொழுதும் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை நீங்களாக அடுத்தவருக்குச் சொல்லும் வரை எவராலும் சரியாகக் கணிக்க முடியாது. நீங்கள் ஆசைப்பட்டதைக் கேட்பதற்கு அச்சப்படுவது உங்கள் வாழ்க்கை மற்றும் கனவுகளின் மூலம் நீங்கள் அடையக்கூடியச் சிறந்தவற்றை தவிர்த்ததாகிவிடும்.

சிறுபிள்ளைதனமோ, முட்டாளோ அல்லது தேவையுடையவரோ நாம் என்ற பய உணர்வு கேட்பதில் இருந்து நம்மைத் திசை திருப்பும். அடுத்ததாக நிராகரிக்கப்பட்டுவிடும் என்ற பயம் நாம் விரும்புவதைக் கேட்பதற்கானத் தைரியத்தையும் தராது. நம்மில் பலருக்கு நிராகரிப்பின் மேல் ஒரு மரணபயம். இந்த நிராகரிப்பின் மீதான மரணபீதி என்பது நாம் உருவாக்கி நமக்கே கொடுத்துக் கொண்ட ஒன்றுதான்.

இது போதாதென்று அடுத்து வருவது "இது மட்டும் இருந்திருந்தால்" என்ற பகுதி. நான் மட்டும் 20 பவுண்டு எடைக் குறைவாக இருந்திருந்தால்; என் தலைமுடியின் நிறம் மட்டும் இன்னும் பளபளப்பாக இருந்திருந்தால்; நான் மட்டும் உயரத்தில் 510 இருந்திருந்தால், என்னிடம் மட்டும் சிறந்த மகிழ்வுந்து, சிறந்த மனை இருந்திருந்தால்; நான் மட்டும் ஊரின் அடுத்த பகுதியில் வசித்திருந்தால்.... அவன்/அவள் என்னுடன் இன்றொரு நாள் வெளியில் வந்திருப்பார்கள். ஆதலால் இப்பொழுது நான் குண்டாக, விரும்பத்தகாத, ஏழ்மையான, தவறான தலைமுடி நிறத்துடன் அல்லது ஊரின் தவறான பகுதியில் வசிப்பவர் என்ற முடிவுக்கு வருகிறோம். அது ஒரு நம்பிக்கையாக உருவாகி நமது விருப்பமெல்லாமே

நாம் கேட்பவை நிராகரிக்கப்பட்டுவிடும் என்கிற பயத்தை நமக்குள் உருவாக்கி விடுகிறது.. இறுதியில் இல்லை ன்ற பதில் நாம் நம்மைப் பற்றி முதலில் நம்பியதற்கு வெறும் சாட்சியாகத்தான் வருகிறது.

ஒரு பொருளுக்கு ஆசைப்படும்பொழுது அது கிடைக்காதென்று முடிவு செய்யாமல், அதைப் பெறுவதற்கான அனைத்து நல்ல குணாதிசயங்களும் நமக்குள்ளது என்பதை நம்புவது மிக முக்கியம்.நீங்கள் கேட்கும் நபர் இல்லையென்று சொன்னாலென்ன? எதை இழந்தீர்கள், எதுவும் இல்லை. உங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால் தொடர்ந்து உறுதியாக மீண்டும் கேளுங்கள்.

நீங்கள் விரும்புவதைக் கேட்கத் தயாராக இருங்கள். அது ஊதிய உயர்வாகவோ, விடுமுறையாகவோ, நீண்ட உணவு இடைவேளையாகவோ, தள்ளுபடியாகவோ மற்றும் ஒப்பந்தமாகவோ இருக்கலாம். தாங்கள் விருப்பப்படுவது எதுவாக இருந்தாலும் கேட்கத் தொடங்குங்கள் மற்றும் பெறுவீர்கள் என்று எதிர்பாருங்கள். மேலும், மீண்டும் கேட்கத் தயாராகுங்கள் கிடைக்கும் வரை.

தங்களுக்குள் தாங்கள் கேட்கும் இந்த மூன்று கேள்விகள் ஒரு சிறந்த பயிற்சியாக அமையும்.

நான் விரும்புவது எனக்கு கிடைக்கப்பெற்றால்:

நான் எப்படி இருப்பேன்?

நான் அதை எப்படி உணருவேன்?

நான் அதனுடன் என்ன செய்யப் போகிறேன்?

அதே தருணத்தில், சில நேரங்களில் தாங்கள் விரும்புவது கிடைக்காமலும் போகலாம். ஆனால் உண்மையில், விரும்புவதைக் கேட்பது உங்களுக்குச் சிறந்த சந்தர்ப்பங்களையும் நீங்கள் விருப்பப்படுவது கிடைக்கும்வரை மீண்டும் மீண்டும் கேட்பதற்கும் கற்றுத் தரும்.

வித்தியாசமான அணுகுமுறை

மிகவும் பரபரப்பானதொரு காலைப் பொழுதில் கண்ணில்லாத சிறுவன் ஒருவன் நடைபாதையில் நடந்து வந்தான். தான் கொண்டு வந்த பலகையில், "எனக்குக் கண்கள் இல்லை. அதனால் எனக்கு உதவுங்கள்" என்று எழுதி நடைபாதையில் போய் வரும் அனைவரும் பார்க்கும் வகையில் வைத்தான். அவன் மேல் பரிதாபம் கொண்ட சிலர் அவன் முன்னிருந்த விரிப்பில் சில்லறைகள் இட்டனர்.

அப்போது அவ்வழியே சென்ற மனிதன் தன்னிடமிருந்த பணத்தை விரிப்பிலிட்டான். அச்சிறுவன் வைத்திருந்த பலகையின் மறுபுறம் வேறு சில வார்த்தைகள் எழுதி அனைவரும் பார்க்கும் விதமாக வைத்தான். பிறகு அந்த வழியே சென்றுவிட்டான்.

அதன் பிறகு அவ்வழியே சென்ற அனைவரும் சிறுவனின் விரிப்பில் பணமிட ஆரம்பித்தனர். தான் எழுதிய வார்த்தைகள் எந்த அளவு சிறுவனுக்கு உதவியது என்றறிய மாலையில் மீண்டும் அவ்வழியே வந்தான் அம்மனிதன். பொதுவாக உடல் ஊனமுற்றவர்களுக்கு மற்ற புலன்களனைத்தும் மிகவும் சக்தி வாய்ந்ததாகயிருக்கும். அம்மனிதனின் காலடிகள் மூலம் அவன் வருகையை அறிந்து கொண்டான் சிறுவன்.

"காலையில் நீங்கள் எதையோ பலகையில் எழுதிய பிறகுதான் அனைவரும் எனக்கு உதவினார்கள். அனைவரும் உதவும் வகையில் அப்படி அதில் என்ன எழுதினீர்கள்?" என்று கேட்டான். அதற்கு அவன், "நீ எழுதியதையேதான் நானும் எழுதினேன். ஆனால் கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கிறேன். பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை" என்றான். அம்மனிதன் எழுதியது,

"இன்றைய தினம் மிகவும் அருமையாக விடிந்துள்ளது.
ஆனபோதும் என்னால் அதை ரசிக்க முடியவில்லை"

சிறுவனும், மனிதனும் சொல்லும் விஷயம் என்னவோ ஒன்றுதான். சிறுவனுக்கு பார்வையில்லை என்பதையேதான் இருவரும் சொல்கிறார்கள். ஆனால் அதைச் சொல்லும் விதத்தில் வேறுபடுகிறார்கள். சிறுவன் முதலில் மற்றவர்களை உதவிடுமாறு எழுதியிருந்தான். ஆனால், அம்மனிதன் எழுதியதோ, மற்றவர்களால் பார்த்து ரசிக்க முடிந்த ஒன்றைப் பார்வையில்லாத காரணத்தால் சிறுவனால் ரசிக்க முடியவில்லை என்பதாக இருந்தது.

நீங்கள் சொல்ல வருவது அனைவராலும் ஒப்புக்கொள்ளக் கூடியதாக இருக்கலாம். ஆனால் சொல்லும் விதத்தில் சொல்வதால் மட்டுமே உரிய பலனை அடைவீர்கள்.

இதன் மூலம் நாம் அறிய வரும் முத்தான மூன்று கருத்துக்கள் :

* மற்றவர்களிடம் இல்லாத பல அரிய விஷயங்களை நமக்களித்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
* உங்களால் இயன்ற வரையில் மற்றவர்களுக்கு உதவிடுங்கள்.
* எதையும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் அணுகிடுங்கள். ஆக்கப்பூர்வமாக சிந்தித்திடுங்கள். பிரச்சனைக்குத் தீர்வு காண வழிகள் பல உண்டு என்று காண்பீர்கள்.

நன்றி : நிலசாரல்

நிம்மதியாக வாழ்வதற்கான சில வழிமுறைகள்

எந்த ஒரு பொருளையும் உருவாக்கிட சில வழிமுறைகள் உண்டு. அதேபோல் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திட சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென்று சொல்கிறார் டான்யல் ஹோலிஸ்டர்.

* மற்றவர்கள் எதிர்பார்ப்பதைவிட நிறைவாகவும், அன்புடனும் செய்திடுங்கள்.
* நீங்கள் எழுதிய முதல் கவிதையை பாதுகாத்திடுங்கள்.
* மற்றவர்களுக்காக வாழ்ந்திடாமல் உங்களுக்காக வாழ்ந்திடுங்கள்.
* மற்றவர்களிடம் உண்மையான அன்புடன் பழகிடுங்கள்.
* உண்மையான அன்பில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
* அடுத்தவர்களின் கனவுகளை கேலி செய்யாதீர்கள்.
* அன்பு பல நேரங்களில் வருத்தமளித்தாலும், அன்பில்லாமல் வாழ முடியாது.
* நியாயத்திற்காக போராடுங்கள்.
* வேகமாக சிந்தித்திடுங்கள். ஆனால் நிதானமாக பேசிடுங்கள்.
* சாதனைகள் புரிவதற்கு முன்பு தடைகள் பல ஏற்படுவது இயல்பு.
* பெற்றோர்களுடன் தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள்.
* உறவுகளை மிகவும் கவனத்துடன் கையாளுங்கள்.
* உங்களுடைய தவறுகளுக்காக வருந்துங்கள்; உணர்ந்து திருந்திடுங்கள்.
* நீங்கள் விரும்புகிறவர்களை மணப்பதைவிட உங்களை விரும்புகிறவரை மணந்திடுங்கள்.
* உங்களுக்கென தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள்.
* எக்காரணத்திற்காகவும் உங்களுடைய சுயமரியாதையை இழக்காதீர்கள்.
* சில கேள்விகளுக்கு மவுனமே சிறந்த பதில்.
* நிறைய புத்தகங்களை வாசித்திடுங்கள்.
* அன்பான சூழ்நிலையில் வாழ்ந்திடுங்கள்.
* கடந்த கால வாழ்க்கையை மறந்து நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.
* எந்த ஓரு சூழ்நிலையிலும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுங்கள்.
* உங்கள் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ்ந்திடுங்கள்
* பண்புடன் வாழுங்கள்.
* துயரமான நாள்களில் கடவுளை நம்புங்கள். அவரால் மாற்ற முடியாதது எதுவுமில்லை.

Tuesday, March 10, 2009

எதுவாகவேண்டுமோ அதுவாக மாறிவிடு

எல்லோரும் மற்றவர்களைப் பார்த்து உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்கத் துடிப்பார்கள். அது மட்டுமல்ல பலர், வெற்றி பெற்றவர்களைப் பார்த்து, அவரின் வெற்றியின் ரகசியம் என்னவாக இருக்கும்? யாரோ பலே பார்ட்டியின் சப்போர்ட் இருக்கும் போல… இல்லேன்னா எப்படி வெற்றியை இவ்வளவு எளிதில் அடைந்து இருக்க முடியும்’ என்று தலையைப் பிய்த்துக் கொள்வதும் உண்டு. இதோ அந்த ரகசியம் உங்களுக்கு மட்டும்!!

ஒரு மகாராஜா தன் அரண்மனையில் மிகச் சிறந்த சேவல் ஓவியத்தை வைக்க நினைத்தார். மன்னனின் ஆசை காட்டுத் தீ போல் எல்லா ஊரிலும் பரவியது. ஏத்தனையோ ஓவியங்கள் வந்தும் அவற்றில் மன்னனுக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை. மற்ற நாடுகளில் உள்ள ஓவியர்களுக்காக ஒரு போட்டி வைத்தார் மன்னர்.

அவரது ஆசை போல், மற்ற நாட்டு ஓவியர்கள் வரைந்த படங்கள் மன்னரின் பார்வைக்காக வைக்கப்பட்டன. மன்னர் தான் குழந்தையாக இருந்த போது தனக்கு ஓவியம் கற்றுக் கொடுத்த அந்த வயதான ஓவிய ஆசிரியரை இப்போட்டியின் நீதிபதியாக நியமித்தார்.

எல்லா ஓவியங்களையும் பார்த்த அந்த வயதான ஆசிரியர் மீண்டும் ஒருமுறை ஓவியங்களைப் பார்த்தார். கன்னத்தைத் தடவிய படியே நடந்த அவரிடம், மன்னர்.

”என்ன சிறந்த சேவல் ஓவியத்தைத் தேர்வு செய்து விட்டீர்களா?” என ஆசையாகக் கேட்டார். “இந்தப் போட்டிக்கு இதில் எந்த ஓவியமும் தகுதி ஆனது இல்லை” என்றார். ஆசிரியர் அமைதியாக, எல்லோரும் வாயடைத்துப் போனார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு, “இந்த ஓவியங்கள் வைத்த அறையில், சேவல்களை விடுவோம். ஒரே இனத்தைச் சேர்ந்த மற்ற சேவலைப் பார்த்ததும், சேவலுக்குச் சண்டை போடத் தோன்றும். அப்படி எந்தச் சேவல், எந்த ஓவியத்தைப் பார்த்துச் சண்டை போடத் துவங்குகிறதோ, அந்த ஓவியம்தான் மிகச் சிறந்த ஓவியம் என்று முடிவு செய்வோம்” என்றார் அந்த ஓவிய ஆசிரியர்.

அவரது வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாமல், மன்னர் அந்த அறையில் நிறைய சேவல்களைக் கொண்டு வந்து விட கட்டளை பிறப்பித்தார். ஆனால் வந்த சேவல்கள் எந்த ஓவியத்தையும் பார்த்துச் சண்டை போடாமல், நேரே வெளியே வந்தன.

மன்னர் மனம் தளராமல், “சேவல்களைச் சண்டை போடத் தூண்டும் அந்த ஓவியத்தை நீங்கள் ஏன் வரையக்கூடாது?” என ஓவிய ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார்.

”மன்னர் உங்கள் சித்தம். ஆனால் எனக்கு ஆறு மாத கால அவகாசம் தேவை” என்றார் முதியவர். மன்னரும் சரி என்று “ஆறு மாதம் கழித்து, இதே அறையில் இப்போட்டி நடக்கட்டும்” என்று கட்டளை பிறப்பித்தார். காலம் சுற்றியது. சரியாக ஆறு மாதம் ஆனதும், அதே அறையில் எல்லா ஓவியர்களும் மீண்டும் கூடினார்கள். ஆனால் அந்த முதியவர் கையில் எந்த ஓவியத்தையும் கொண்டு வரவில்லை. மன்னர் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

“மன்னா ! இப்போது இங்கேயே அரை மணியில் வரைகிறேன். எனக்கு அதற்கான உபகரணங்கள் தேவை” என்று முதியவர் கூறியதும், அனைத்தும் வந்து சேர்ந்தன. ஓவியர் கடகடவென ஓவியத்தை வரைந்தார். பிறகு அதை மற்ற ஓவியங்களோடு வைத்தார். மீண்டும் அந்த அறைக்குச் சேவல்கள் அனுப்பப்பட்டன. எல்லோரும் மிக ஆவலாகக் காத்திருக்க, அவரது ஓவியத்தைப் பார்த்து ஒரு சேவல் அதில் வரையப்பட்டிருந்த சேவலை நிஜ சேவலாக நினைத்துச் சண்டைக்குப் போனது ! அப்போட்டியில் வெற்றி பெற்றது இவரது ஓவியம்தான் !

மன்னனுக்கு ரொம்ப சந்தோஷம். “உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? ஏன் ஆறு மாத காலம் உங்களுக்குத் தேவைப்பட்டது? இருப்பினும், நீங்கள் அப்போது எதுவும் வரையாமல், கடைசியில் வரைய அரைமணி நேரம் ஏன் கேட்டீர்களா?” என மன்னர் அந்த முதியவரிடம் கேட்டார்.

“மன்னா, கடந்த ஆறு மாதமாக நான் கோழி, சேவல்களோடு வாழ்ந்தேன் . அவை எப்படி உணவு உண்கிறதோ, அதுபோன்றே நானும் உணவு உட்கொண்டேன். அவை எப்படி நடக்கிறதோ அது போலவே நானும் நடந்தேன். அவை எப்படி தூங்குகிறதோ அது போலவே நானும் தூங்கினேன். நானே கோழியாக ஒன்றிப்போய் கோழியாகவே மாறி விட்டேன். அதற்குப் பிறகுதான் நான் அந்த சேவல் படத்தை வரைந்தேன்” என்று அந்த முதியவர் கூறினார்.

ஆகவே ஒரு காரியத்தில் ஒன்றிப் போதல் என்பது மிகவும் அவசியம். வெற்றியின் ரகசியம் ஈடுபட்ட காரியத்தில் ஒன்றிப் போவதுதான். அது எந்தக் காரியமாக இருந்தாலும் முழு ஈடுபாடும், ஒன்றிப் போவதும் முக்கியம்.

தொழுகையின் போதும், நாம் ஆண்டவனோடு ஒன்றிப்போக வேண்டும். அப்படிச் செய்தால் நம் துஆ நிறைவேறும். வெறும் முணுமுணுத்தால் போதாது. அதோடு ஒன்றிப் போய் பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டு வேலையாக இருந்தாலும், அலுவலக வேலையாக இருந்தாலும் படிப்பாக இருந்தாலும் எடுத்த காரியத்தோடு நாம் ஒன்றிப் போனால், வெற்றி நிச்சயம்.

நன்றி :

இனிய திசைகள்

Thursday, February 12, 2009

வெற்றியை நோக்கிப் பற!
பறக்க முடியாவிட்டால் ஓடு!
ஓட முடியாவிட்டால் நட!
நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்.
ஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு.

தெய்வம் காட்டுமே தவிர
ஊட்டாது.

ஒரு மனிதனின் வாழ்க்கையில்
நன்மை செய்தலே
உண்மையான இன்பம் அளிக்கும் செயல்.
- சர் பிலிப்சிட்னி

ஒரு நல்ல நூல்
ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும்.
- வில்லியம் ஹாஸ்விட்

Tuesday, January 13, 2009

முத்துக்கள் சில!!..

மண்ணுக்குள் மறைந்தால்தான் செடியாக முளைக்க முடியும்.
-மு.வ

மௌனமாக இருப்பது கோழைத்தனம் என்று நினைத்துவிடக் கூடாது.
-மொரார்ஜி தேசாய்

ஆற்றலை வெளிப்படுத்தும் ஆற்றல் இல்லாவிட்டால் அந்த ஆற்றல் மதிப்பற்று போய்விடுகிறது.
- நெப்போலியன்

இனிமையாக பேசுபவனுக்கு பகைவர்கள் இருக்கமாட்டார்கள்.
-கிருபானந்த வாரியார்.

துன்பமும் ஏழ்மையும் போதிப்பதுபோல் வேறொன்றும் போதிக்கமுடியாது.
-விவேகானந்தர்.

உங்களுக்கு அவசியமில்லாததை நீங்கள் வாங்கினால் சீக்கிரமே உங்களுக்கு அவசியமானவற்றை விற்க நேரிடும்.
-ரிச்சர்ட் சாண்டர்ஸ்.

ஒருமுறை அறிவாளியுடன் பேசுவது,ஒரு மாதம் நூல்களைப் படிப்பதைவிட அதிக நன்மை தரும்.
- யாரோ.

ஒழுக்கம் பிச்சைக்கார உருவில் இருந்தாலும் கௌரவிக்கப்படும்.
-யாரோ.

மனம் ஒரு நல்ல வேலைக்காரன்,ஆனால் மோசமான எஜமான்.
-சாக்ரட்டீஸ்.

உங்கள் எதிரிகளை கவனியுங்கள்,அவர்களே உங்கள் குற்றங்களை முதலில் கண்டுபிடிப்பவர்கள்.
-பெனிலின்.

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழ்விப்பதில்தான் உள்ளது.
-மெஹர்பாபா.

ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனது பத்து விரல்கள்.
-ராபர்ட் கோலியர்.

நமக்கு தெரிந்தது எது? தெரியாதது எது? -என்பதை அறிந்துகொள்வதே உண்மையான அறிவு.
-கன்பூசியஸ்

படிப்பில் பிரியமில்லா அரசனாக இருப்பதைவிட ஏராள நூல்களைக் கற்ற ஏழையாக இருப்பது நல்லது.
-மெக்காலே.

எதை வேண்டுமானாலும் புள்ளி விவரங்களால் அளந்திடமுடியும், உண்மையைத்தவிர.
-குஷ்வந்த் சிங்.

அதிருப்தி என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள செல்வம்.ஆடம்பரம் நாமே தேடிக்கொள்ளும் வறுமை.
-சாக்ரடீஸ்.
__________

Wednesday, December 17, 2008

நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !

நிறைந்த கல்விமான்களும் அறிவாளிகளும் ஆற்றல்மிக்கவர்களும் இல்லாத காரணத்தினால்தான் ஒரு சமுதாயம் முன்னேற முடியாமல் போகிறது என்று கூறுவதைவிட பண்பாடும் ஒழுக்கமும் மனிதத் தன்மையும் இல்லாதவர்கள் நிறைந்திருப்பதால்தான் ஒரு நாடு முன்னேற்றமடையாமல் இருக்கிறது என்று கூறுவதுதான் உண்மை . - மார்க்கோஸ்

சிலபேர் கல்விமான்களாக இருப்பார்கள் ஆனால் மனிதப் பண்பாடு இல்லாதவர்களாக இருப்பார்கள். இவர்களை விடக் கொஞ்சமாகப் படித்து கொஞ்சமாக அறிவு பெற்று மனிதப்பண்பு நிறைந்தவர்களால் தான் ஒரு சமுதாயம் நல்லப்படியாக வளர முடியும்.

முயற்சி

சிந்தனை, தொழில், செல்வம் இவைகளில் வீரப்பரம்பரை நாம் என்று சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தும் எங்கே தவறு செய்தோம்.

எங்கே நுலிழையைத் தவற விட்டோம்.

ஏன் ஏன் என கொஞ்சம் சிந்தியுங்கள்.

என்னைத் தவிர யாரும் என்னைக் கெடுக்க முடியாது.

குறுக்கு வழியில் லாபமடையவே நம் சிந்தனை செல்கிறது. சுயமாகச் செயல்புரியும் ஆற்றலைக் கட்டவிழ்த்து விடுவதில் நாம் வெற்றி பெறாததே இதற்குக் காரணம்.

எது உண்மை?

விருப்பு வெறுப்பின்றி உண்மை நாடும் பேரவாவுடன் நாம் இவற்றிற்கு விடை காண வேண்டும்.

நல்வாழ்வுக்கு நாம் பொறுப்பு. நம் சூழ்நிலைக்கு நாம் பொறுப்பு நம் முன்னேற்றத்திற்கு நாம் பொறுப்பு என்ற உணர்வு நம்மிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆள்பவர்கள் மீது பழியைச் சுமத்துகிறோம்.

சிறு வயதிலிருந்து பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் வளர்ந்த பின் மேலதிகாரியிடமும் நாம் அவர்கள் முகம் பார்த்து அவர்களது ஆதரவையும் அனுமதியையும் எதிர் நோக்கி நடந்து கொள்ளுகிறோம்.

இல்லாதவனிலிருந்து இருப்பவன் வரை பொருட்களை இனாமாகப் பெற்றுக் கொள்வதை நியாயம் என்று கருதுகின்றோம். இனாமாகப் பெறுவது யாசகம், இழிவு என்ற மனோபாவம் நம்மிடையே இல்லை. தன் காலிலே நிற்க முடியாத சார்ந்து நிற்கும் ஒரு சமுதாயம், நமது பரம்பரையாய்ப் போய்விட்டது. பிறரிடமிருந்து ஒரு பொருளைப் பெறுவது முறையல்ல. நம் தன்மானத்தில் தலையிடிக்கும் செயல் என்று மேல்நாடுகளில் கருதுகிறார்கள். நம் நாட்டில் இது நியாயமாகப் படுகிறது. ஜப்பானில் ஒரு கடையில் இரு நெருக்கமான உறவினர்கள் பானம் அருந்தினால் அவரவர் செலவை அவரவரே செலுத்துவார்கள். எக் காரணங்கள் கொண்டும் ஒருவர் செலவை மற்றவர் ஏற்கவும் மாட்டார். இதுதான் தன் மானம், எல்லோரும் சமநிலை. எல்லோரும் வாழ வேண்டுமென்ற மனோபாவம். எமது நாடு எமக்காக கடும் உழைப்பு உழைக்கிறோம் என்ற சிந்தனை. களவு கிடையாது.

மனதிற்கும் செயலுக்கும் பெரிய தொடர்பிருக்கிறது உண்மை, நேர்மை சமத்துவம், உதவும் உள்ளம் என்ற நிரந்தர உண்மைகளால் தான் இவ்வுலகம் இயங்குகிறது. இதற்கு மாறாக நம் மனோபாவம் அமையும் போது நம்மால் செயல்பட முடிவதில்லை. காரியங்கள் பூர்த்தி பெறுவதில்லை. பிச்சை மனோபாவம் இந்நிரந்தர உண்மைகளுக்கு மாறுபட்ட செயல்.

சந்திர மண்டலத்திற்கு மனிதனை அனுப்பியது திட்டமிட்ட செயல். நம்மனத்தில் தோன்றும் எண்ணங்கள் நாளடைவில் திடமான நம்பிக்கையாய் மாறுகிறது. திடமான நம்பிக்கை நம்மிடம் செயலைத் து}ண்டுகிறது. திரும்பத் திரும்பச் செய்யப்படும் செயல் நமது பழக்கமாய் மாறுகிறது. நமது பழக்க வழக்கங்களே குண நலன்களாகத் திகழ்கின்றன. நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன.

-ஆத்ம சிந்தனைகள் கருமங்கள் - எண்ணங்கள்
( ஆ. சி. முருகுப்பிள்ளை )

மன இறுக்கத்தைத் தளர்த்த பத்து எளிய வழிகள்

1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்
கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.
2. நன்றாகத் தூங்குங்கள்
நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.

3. நடங்கள்! ஓடுங்கள்!
தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

4. ஓய்வெடுங்கள்.
பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5. சிரியுங்கள்
மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

6. மனம்விட்டுப் பேசுங்கள்.
மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்
இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

8. தெளிவாகச் செய்யுங்கள்
எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

9. விளையாடுங்கள்
உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10. மற்றவர்களையும் கவனியுங்கள்
உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும். ஆனால் அதை

Wednesday, November 12, 2008

வாழ்க்கையை மகிழ்ச்சி உள்ளதாக்க முப்பது வழிகள்

1. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வாய் விட்டு சிரியுங்கள்

2. குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

3. நீங்கள் விரும்பும் புத்தகத்தை படிக்க பழகிக் கொள்ளுங்கள்.

4. செய்யக் கூடாது என்று நினைக்கும் செயலை முடிந்த வரை கொஞ்சமாவது செய்ய மனதை பழகிக் கொள்ளுங்கள்.

5. நீண்ட நாளைய பழகிய நண்பர்களை அடிக்கடி சந்தித்து பேசி, உங்கள் பசுமையான பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

6. இது வரை நீங்கள் அறிந்திராத ஒரு நாட்டைப் பற்றிய புது விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

7. ஒவ்வொரு நாளும் நடைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

8. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து பழத்துண்டுகளையோ, காய்கறிகளையோ, விரும்பி உண்ண பழகுங்கள்.

9. நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்களை நீங்கள் விரும்புகின்றவர்களிடமோ, அல்லது நெருக்கமானவர்களிடமோ, மனதார பகிர்ந்து கொள்ளுங்கள்.

10. உங்களுக்கு பிடித்த, உங்களை கவர்ந்த கவிதைகளை அடிக்கடி நினைத்து பார்த்து பரவசமடையுங்கள்


11) அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள் - நீங்கள் மற்றவர்களுக்கு அளிப்பதே உங்களுக்குத் திரும்பி வருகிறது.

12) நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மனதாரப் பாராட்டுங்கள் - பாராட்டுக்களால் மகிழ்வுறுவது ஒரு இயற்கையான மனித சுபாவம்.

13) மன்னிப்பைக் கேட்குமுன்பே மன்னித்து விடுங்கள் - இரவு உறங்கு முன்பு தனக்கு எதேனும் தவறு இழைதவர்களை மனதார மன்னித்து விடுங்கள்.

14) எவரைப் பற்றியும் விரோத மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

15) மனத்தை ஒரு குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் - எதிர்மறையான எண்ணங்கள், பொறாமை, பேராசை, கோபம் ஆகியவை துன்பம் விளைவிக்கும்.

16) எது நடக்கிறது என்பதைவிட நடந்ததை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதே முக்கியம் - சில நடப்புக்களை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் வாழ்க்கையின் நிம்மதியை நிச்சயிக்கிறது.

17) நல்லது நடக்குமென்றே நம்புவோம் ஆனால் மோசமானவை நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம்.

18) குழந்தைகளிடம் தன்னுடைய பெற்றோர்கள் எப்போதும் தங்களிடம் அக்கறை காட்டவும், வழிகாட்டவும் இருக்கிறார்கள் என்ற முறையில் பழக வேண்டும்.

19) மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக் கொள்ளவேண்டும்.

20) நாம் எப்போதுமே வெற்ற்¢ பெற்றுக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.


21) நண்பர்கள் வாழ்கையில் முக்கியமானவர்கள்.

22) மனிதன் என்பவன் நல்லது கெட்டது கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இதைப் புரிந்து கொண்டு நாம் சாதனையை நோக்கி நடையிடவேண்டும்.

23) உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். ஆனால் உங்களுடைய குறைபாடுகளையும் புரிந்து கொள்ளுங்கள்.

24) மற்றவர்களிடம் நல்லதையே பாருங்கள் - குறைகளைப் பெரிது படுத்தாதீர்கள்.

25) அச்சம் தவிருங்கள்.

26) இறைவனின் அருளால் எல்லாமே சாத்தியம்தான்.

27) நாளை நடப்பதைப் பற்றிக் கவலையுறாமல் இறைவன் உடன் இருக்கிறான் என்பதை நம்புங்கள்.

28) ஹாஸ்ய உணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். சிரித்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களோடு இணைந்து ஒண்றாகச் சிரித்து வாழ வேண்டும். ஆனால் மற்றவர்க¨ளைப் பார்த்து நகைக்கக்கூடாது.

29) வெற்றி என்பது பணத்தினாலோ, பொருள்களினாலோ அளவிடப்படுவதில்லை. மகிழ்ச்சி என்பது நம் மனதின் நிலையைப் பொறுத்தே இருக்கிறது.

30) எந்த நிலையிலும் இறைவனை மனதார நினையுங்கள்

வெற்றிக்கு ஏழு குறள்கள்

எல்லா சுயமுன்னேற்ற நூல்களையும் சேர்த்து சாராம்சத்தை சுருக்கமாக அறிய முற்படுகிறீர்களா? உங்களுக்கு திருக்குறள் தான் ஒரே புகலிடம். கடுகைத் துளைதேழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் என்ற வர்ணனை திருக்குறளைப் பொருத்த வரை சிறிதும் மிகையல்ல.

எந்த சூழ்நிலையானாலும் சரி அதைச் சமாளிக்க என்ன அறிவுரை வேண்டுமானாலும் ஒருவன் திருக்குறளில் இருந்து பெற்றுத் தெளிவடைய முடியும். ஆன்மீகம் ஆகட்டும், லௌகீகம் ஆகட்டும், அறம் ஆகட்டும், தொழில் ஆகட்டும், அமைதி ஆகட்டும், மகிழ்ச்சி ஆகட்டும் குழப்பாமல் வழி காட்டும் அறிவுப் பொக்கிஷம் திருக்குறள் தான்.

நீங்கள் வெற்றியடைய விரும்புகிறீர்களா? உங்களுக்குப் பல நூல்கள் படிக்க நேரமும் பொறுமையும் இல்லையா? உங்களுக்கு திருக்குறள் உதவும். அதிலும் நீங்கள் எல்லாக் குறள்களையும் படிக்க வேண்டியதில்லை. ஏழே ஏழு குறள்களை நினைவில் நிறுத்தி பின்பற்றுங்கள் போதும்.


1) எண்ணத்தில் உறுதி:

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியராகப் பெறின். (666)

நினைத்ததை நினைத்தபடி அடைபவர் யார் தெரியுமா? தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருப்பவர்கள் தான். எண்ணத்தில் உறுதி இல்லா விட்டால் அது செயலில் முடியாது. செயலில் முடியாத எண்ணங்கள் விதைக்காத விதைகள். மாறாத உறுதியான எண்ணம் தான் எல்லா வெற்றிக்கும் ஆரம்ப விதி

2) Think positive

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினினும் தள்ளாமை நீர்த்து. (596)

எண்ணுவதெல்லாம் உயர்வானதாகவே இருக்க வேண்டும். பாதகமான சூழ்நிலைகளிலும் உயர்வான எண்ணங்களை எண்ணுவதை விட்டு விடக் கூடாது. எண்ணமே வாழ்க்கை என்பது அனுபவ உண்மை. சாதகமான சூழ்நிலைகளில் பாசிடிவ் ஆகவும், உயர்வான எண்ணங்களையும் நினைப்பது பெரிய விஷயமல்ல. பாதகமான சூழ்நிலைகளிலும் அதே எண்ணங்களோடு இருப்பவன் தான் வெற்றியை தனதாக்கிக் கொள்கிறான்.

3) விடாமுயற்சி

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்கு செல்லாதது இல். (472)

தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்கு அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது எதுவும் கிடையாது. வெற்றிக்கு ஆயிரம் வழிகள் இருக்கலாம். நம் இயல்புக்குப் பொருந்துகிற வழியைத் தேர்ந்தெடுத்து அதற்கு அறிய வேண்டிய அனைத்தையும் அறிந்து அந்த வழியில் விடா முயற்சியுடன் முயன்றால் வெற்றி நிச்சயம்.

4) இந்த ஐந்தில் கவனம் தேவை

பொருள்கருவி காலம் வினையிடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். (675)

வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தினையும் குழப்பம் இல்லாமல் சிந்தித்து செயல் புரிய வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றில் குழப்பம் இருந்தால் கூட அது வெற்றி வாய்ப்பை பாதிக்கும்.

5) இந்த நான்கைத் தவிருங்கள்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். (605)

காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் இந்த நான்கும் கெடுகின்ற இயல்புடையவர்கள் விரும்பி ஏறும் மரக்கலம் என்கிறார் திருவள்ளுவர். வெற்றியடைய வேண்டுபவர்கள் தோல்விக்கான வாகனத்தில் பயணம் செய்யலாமோ?

6) இவை இரண்டும் வழுக்குப்பாறைகள்

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது. (854)

ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும், யாருக்கும் எளியவன். வெற்றியின் உயரத்திற்குச் செல்பவர்கள் இந்த இரண்டு வழுக்குப் பாறைகளில் கவனமாக இருப்பது நல்லது. இல்லா விட்டால் இது வரை சாதித்தது எல்லாம் வீணாய்ப் போகும்.

7) இந்தப் பேருண்மையை மறக்காதீர்கள்

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை (659)

பிறர் வருந்துமாறு செய்து பெற்றதெல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய் விடும். நல்வழியில் வந்தவை தற்காலிகமாக இழக்கப்பட்டாலும் பின்னர் பயன் தரும். இந்த பிரபஞ்ச உண்மையை என்றுமே மறந்து விடாதீர்கள். வெற்றி என்பது எந்த வழியில் வருகிறது என்பது மிக முக்கியம். நேர்மையற்ற வழியில் மற்றவர் வயிறெரிந்து வருவதெல்லாம் நம்மை நிம்மதியாக இருக்க என்றுமே விடாது.

இந்த ஏழு குறள்களில் முதல் நான்கு வெற்றிக்கு வழி சொல்கின்றன. அடுத்த இரண்டும் தோல்வி தரக் கூடியவற்றில் எச்சரிக்கையாக இருக்கச் சொல்கின்றன. கடைசி குறள் வெற்றியின் நிறைவு நமக்கு என்றென்றைக்கும் நிலைக்க வேண்டுமானால் அது நியாயமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது

(Source:- http://www.enganeshan.blogspot.com/)

30 USEFUL TIPS FOR WINNING OVER PEOPLE

1. Avoid beginning with details: give a big picture first.
2. You may take time to develop a relationship but do not overlook it.
3. Emphasize on a good work ethics.
4. Use logic with clearly identified priorities and goals.
5. Be willing to wander off towards new and different directions.
6. Appeal to their role as a consultant and advisor.
7. Do not take others' apparent belligerence personally: be flexible.
8. Appeal to their curiosity: use reason and logic.
9. Keep asking questions about their opinions and ideas.
10. Appeal to established traditional values.
11. Use main stream humor but be generally serious.
12. Appeal to their need to innovate.
13. Make your boundaries clear.
14. Do not interrupt them.
15. Emphasize what is in it for them.
16. Show appropriate emotion to support their position.
17. Allow them time to read and have moments of silence.
18. Do not get too close physically. People generally dislike it.
19. Take their stress seriously but not personally.
20. Be genuine in your intent and purpose. They can see it through your eyes.
21. Appeal to their sense of responsibility.
22. Use the promises of physical rewards such as group dinner etc and keep your word.
23. Avoid a complex vocabulary.
24. Avoid a reference to considerations for others.
25. Notify them if you are going to be late.
26. Emphasize that they are in control.
27. Be a friend even if you are a boss.
28. Be presentable.
29. Do not make personal remarks.
30. Do what you say and say what you do.

Three big mistakes we often commit
Mistake # 1 : Advising before understanding.
Mistake # 2 : Attempting to build / rebuild relationships without changing conduct or attitude.
Mistake # 3 : Assuming that good example and relationship are sufficient.

21 Rules of Life

1. Marry the right person . This one decision will determine 90% of your
happiness or misery.

*********

2. Work at something you enjoy and that's worthy of your time and talent.

*********

3. Give people more than they expect and do it cheerfully.

*********

4. Become the most positive and enthusiastic person you know.

*********

5. Be forgiving of yourself and others.

*********

6. Be generous.

*********

7. Have a grateful heart.

*********

8. Persistence, persistence, persistence.

*********

9. Discipline yourself to save money on even the most modest salary.

*********

10. Treat everyone you meet like you want to be treated.

*********

11. Commit yourself to constant improvement.

*********

12. Commit yourself to quality.

*********

13. Understand that happiness is not based on possessions, power or
prestige, but on relationship with people you love and respect.

*********

14. Be loyal.

*********

15. Be honest.

*********

16. Be a self-starter.

*********

17. Be decisive even it it means you'll sometimes be wrong.

*********

18. Stop blaming others. Take responsibility for every area of your life.

*********

19. Be bold and courageous. When you look back on your life, you'll regret
the things you didn't do more than the ones you did.

*********

20. Take good care of those you love.

*********

21. Don't do anything that wouldn't make your Mom proud.

Thursday, September 25, 2008

ஏ‌ற்கனவே தெ‌ரி‌ந்ததுதா‌ன்,ஆனாலு‌ம் ஒரு முறை

இவை எ‌ல்லா‌ம் உ‌ங்களு‌க்கு ஏ‌ற்கனவே தெ‌ரி‌ந்ததுதா‌ன். ஆனாலு‌ம் ஒரு முறை ஞாபக‌ப்படு‌த்‌து‌‌கிறோ‌ம்.

தினமும் குடிக்கும் டீயின் அளவை கட்டுப்பாட்டில் வையுங்கள்.

காலையில் அதிகமான நீரை பருகுங்கள். இரவில் குறைவாக அருந்துங்கள்.

தினமும் இரண்டு வேலை காபி குடிப்பதை தவிருங்கள்.

இரவு 10 மணிக்கு தூங்கி காலை 6 மணிக்குள் எழுவதே சிறந்தது.

மாலை 5 மணிக்குப் பிறகு அளவுக்கு அதிகமான உணவை உண்ணாதீர்கள்.

மாத்திரைகளை குளிர்ந்த நீருடன் பருக வேண்டாம்.

மாத்திரை சாப்பிட்டதும் உடனடியாக படுக்கச் செல்ல வேண்டாம்.

சரியான தூங்கும் பழக்கம் இருப்பவர்களை முதுமை அண்டாது.

காலையில் நடை செல்ல முடியாதவர்களுக்கு மாலை 5 மணில் இருந்து 8 மணி வரை நடை செல்வதற்கு சிறந்த நேரமாகும்.

மின்னூட்டம் போட்டிருக்கும் செல்பேசியை பயன்படுத்த வேண்டாம்.

பொதுவாக செல்பேசியில் பேசுவதற்கு இடது பக்க காதைப் பயன்படுத்துங்கள்.

செல்பேசி காதுக் கருவியை அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது ஓய்வு கொடுங்கள்.

உட்கார்ந்தே செய்யும் வேலையாக இருந்தாலும் அவ்வப்போது எழுந்து சிறிது நேரம் நடந்து வாருங்கள்.

தொடர்ந்து கணினித் திரையை பார்த்தபடி இருப்பதும் கண்களின் தன்மையை பாதிக்கும். எனவே 20 நிமிடத்திற்கு ஒரு முறை பார்வையை மாற்றுங்கள்.

உண்ணாமல் இருப்பதையும், அதிகமாக உண்ணுவதையும் தவிருங்கள்.