Tuesday, February 16, 2010

ICE - Dont miss - it

We all carry our mobile phones with names & numbers stored in its memory but nobody,otherthan ourselves, knows which of these numbers belong to our closest family or friends.

If we were to be involved in an accident or were taken ill, the people attending us would have our mobile phone but wouldn't know who to call. Yes, there are hundreds of numbers stored but which one is the contact person in case of an emergency? Hence this "ICE" (In Case of Emergency) Campaign. 

The concept of "ICE" is catching on quickly. It is a method of contact during emergency situations. As cell phones are carried by the majority of the population, all you need to do is store the number of a contact person or persons who should be contacted during emergency under the name "ICE" ( In Case Of Emergency). 

The idea was thought up by a paramedic who found that when he went to the scenes of accidents, there were always mobile phones with patients, but they didn't know which number to call. He therefore thought that it would be a good idea if there was a nationally recognized name for this purpose. In an emergency situation, Emergency Service personnel and hospital Staff would be able to quickly contact the right person by simply dialing the number you have stored as "ICE."

For more than one contact name simply enter ICE1, ICE2 ,ICE3 etc. A great idea that will make a difference!

Let's spread the concept of ICE by storing an ICE number in our Mobile phones today!

Free Heart Surgery for Children

Free heart surgery for children below 13 years.

 

CHIME is a trust that has been founded by MIOT Hospitals to provide free treatment for poor children suffering from congenital heart diseases.

 

CHIME will offer free surgery for affected children, regardless of community, caste, race and religion. CHIME offers treatment for all children with heart diseases, from newborn to adolescent, through the dedicated MIOT Centre for Children's Cardiac Care.

 

contact: chime@moithospitals.com

 

for more information:

 

http://www.chimemiot.com/


Thursday, January 21, 2010

கல்வி உதவித் தொகை பற்றிய இணையம்

கல்வி கற்க வறுமை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் அரசு, தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் என கல்விக்கு ஏராளமான நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.

அவை எல்லாம் எத்தனை ஏழை மக்களுக்கு சென்று சேருகின்றன. அல்லது எத்தனை ஏழை மாணவர்கள் அது பற்றி அறிந்துள்ளனர்.

இந்த குறையைப் போக்க மும்பையில் உள்ள கல்லூரி மாணவர்கள் 200 பேர் சேர்ந்து ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளனர்.

www.a2zscholarships.com

என்ற இந்த இணையத்தில் மாணாக்கர் படிக்கும் துறை, வீட்டின் வருட வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த இணையதளத்தில் மாணாக்கரது பெயர் உள்ளிட்ட தகவல்களை அளித்தால் போதும். அவர்களுக்கு தகுதியுடைய அனைத்து கல்வி உதவித் தொகை பற்றிய தகவல்களையும், அதை வழங்கும் அமைப்புகள் பற்றிய தகவல்களையும் பெறலாம்.

அதில் உங்களுக்கேற்றதை தேர்வு செய்து அவற்றிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

நமது விண்ணப்பத்தை இந்த இணையதளத்தினரே கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

மேலும் கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனங்களும் தமது தகவல்களை இந்த இணையத்தில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.




Monday, January 4, 2010

இயற்கையின் வரப்பிரசாதம் இளநீர்


கோடையில் உடல் சூட்டைத் தனித்துக்கொள்வதற்கு உன்னத பானம் இளநீர் ஆகும். இளநீர் மனித குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் பரிசு.
சுத்தமான, சவையான, சத்தான பானம் இது. இளநீரின் கலோரி அளவு 17.4/100 ஆகும்.

குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள் இளநீரில் உள்ளன. இளநீரிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும்போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது.


இளநீரில் பொட்டாஸியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது பொட்டாஸியம். இளநீரில் புரதச்சத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச் சத்தின் தரப் பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது.

இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும். உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரி செய்ய இளநீர் குடிப்பது நல்லது. வளர்ச்சியை அதிகரிக்கும்.


ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. உடல் சூட்டை இளநீர் தணிக்கிறது. வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த இளநீரை உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானமாகும். ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்கிறது. முதியர்களுக்கு இளநீர் சிறந்த டானிக் ஆகும்.

சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது

இளநீர் மிக சுத்தமானது. சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காது. இதனால்தான் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீர் மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீர் உதவுகிறது.

Tuesday, October 20, 2009

தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ?

நமது அன்றாட வாழ்வில் Mobile என்பது அனைவருக்கும் ஆறாவது விரல் போல எப்போது கைகளிலே இருக்கும்  , பெரும்பாலானோர் Mobile லை தண்ணீரில் போட்டிருக்கும் அனுபவம் உண்டு .  அப்போது என்ன செய்யவேண்டும் ...

moblie போன் சில  நேரங்களில் தவறி தண்ணீரில் விழுந்தும் ,அதனை எடுத்து கழற்றி வெயிலிலோ அல்லது லைட் வெளிச்சத்திலோ வைத்து Mobile லில்  இருக்கும் தண்ணீரை அகற்றுவோம் .


தண்ணீரில் விழுந்த Mobile லை  என்ன செய்து  சரியாக மீண்டும் இயங்கும்படி செய்யலாம் ?

முதலில் தண்ணீரில் விழுந்த Mobile லை அதனது battery யை கழற்றி வைக்கவேண்டும் பிறகுதான் துணியால் நான்கு  துடைத்து பிறகு அதனை  வெயிலிலோ அல்லது சூடான லைட் ஒளியிலோ வைப்பதைவிட  அதனை அரிசியில் போட்டு மூடி வைக்கவேண்டும்  அரிசி ஈரத்தை சிறப்பாக உறிஞ்சும் தன்மை கொண்டது நான்கைந்து மணி நேரம் கழித்து எடுத்து  பிறகு உபயோகப்படுதிப்பார்க்கலாம்  .

வெயிலிலோ அல்லது லைட் ஒளியிலோ வைக்கும்போது சில நேரங்களில் சூடாகி Mobie circuit இணைப்புகள் வெடித்தோ ,அல்லது துண்டித்துவிடவும்  வைப்பு உண்டு . இதனால் உங்கள் பாக்கெட் கூடுதலாக காலியாகும் வாய்ப்பு உண்டு ,,எனவே அரிசியில் போட்டு வைப்பது சிறந்தது ..  எலாவற்றிர்க்கும் மேலாக Mobile battery எவ்வளவு சீக்கிரம் கழற்றி வைக்கிறோமோ அவ்வளவு  நல்லது ...

Psycology மூலம் உங்கள் குணாதிசயத்தை பிறந்த மாதத்தை வைத்து தெரிந்துகொல்லாம்

 
சமீபத்தில் இங்கிலாந்து பல்கலைகழக ஆய்வில் நமது பிறந்த மாதத்தை  வைத்து நமது குணநலன்களை கண்டறியமுடியும் என்று கண்டுபிடித்துள்ளனர் ,  இதோ நீங்கள் பிறந்த மாதத்தை  வைத்து உங்களுக்கு என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்...

ஜனவரி - -----அமைதியை விரும்புபவர் அமைதியானவர் .

பிப்ரவரி ------- விட்டுக்கொடுக்கும் குணம் கொண்டவர்

மார்ச்----------  அறிவில் சிறந்தவர் ,எளிதில் கற்றுக்கொளும் திறன்

ஏப்ரல்---------  அதிகாரம் மிக்க  ஆனால் கொஞ்சம் முட்டாள்தனம்    உடையவர்

மே-----------அதிர்ஷ்டம் மற்றும் பிறருக்கு உதவும் குணம்

ஜூன்- -------- அன்பானவர் ,போராட்டகுணம் உடையவர்

ஜூலை--------  பேரறிவு கொண்டவர்

 ஆகஸ்ட் --------- சிறப்புடையவர் ஆனால் சோம்பேறி

செப்டம்பர்- ------ஆச்சர்யப்படும் குணம் கொண்டவர்

அக்டோபர்----------கர்வம் மிக்க ஆனால் உதவும் குணம் கொண்டவர்

நவம்பர்- -----------எல்லோரையும் அரவணைத்து செல்லும் குணம் கொண்டவர்

டிசம்பர்- -------------புத்திசாலி ஆனால் silly ..

Sunday, October 18, 2009

Toll Free Numbers

Dial the following numbers in case of Assistance/ Help without paying for it (from BSNL telephones):

» Some of the services are available in select cities only. Please check the availability in your city.

» Services written in blue color are available on STD also.



Service

Number

PSTN Call Center
(for any queries related to landline telephone, ISDN etc. Also accessible from
CellOne, Excel & Tarang phones)
1500
Kisan Call Center
(for any queries related to agriculture)
1551

Police

100

Fire

101

Ambulance

102

Billing complaint
center

166 / 1660-69

Trunk booking

1580

Trunk assistance

1581

STD complaints

1582

National Directory
Enquiry (NDQ) Service

1583

International
trunk booking

1586

International
trunk enquiry

1587

International
Trunk delay information

1588

Telex complaints

1589

Directory enquiry service

197

Telephone Complaint
Booking
198
Emergency Relief Centre
on National Highways
1033
Relief Commissioners
of Central/State/Union territory
1070
Control room of District
Collector/Magistrate
1077

Public Grievance
Cell Telecom Circle HQs

12727

Public Grievance
Cell Kolkata/Chennai

1095

Crime stopper
cell of police in Kerala, Rajasthan, Andhra Pradesh & Mumbai

1090

Women crisis response

1091

Earth-quake Help
line service

1092

Natural disaster
control room

1096

AIDS help line
service

1097

Children in difficulty/
Child Distress Service

1098

Catastrophe & Trauma
service

1099

Free Phone Enquiry1600
India Telephone Card
Enquiry
1602

Billing Complaint
Center (Interactive Voice Response System)

1671-73

Maritime Search and
Rescue control room of coastal guard
1718

Blood bank information
Service

1910

Dial a doctor

1911

Leased Circuits Fault
Booking

1918

Eye bank information
service

1919

Change number
announcement (Hindi)

1951

Changed number
announcement (English)

1952

Changed number
announcement (Regional language)

1953

Changed number
announcement (in case of shift)

1954

Sancharnet Internet
Help desk service

1957

Leased Circuit
Fault Booking (WTR)

1958



http://www.bsnl.co.in/service/tollfree.htm

Friday, September 25, 2009

வீட்டிற்கு ஒரு துளசி செடி வளர்ப்போம் :


துளசி என்றால் எல்லோருக்கும் தெரியும். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
பல வீடுகளில் இன்று அழகுக்காக பல தினுசு தினுசா செடி வளர்க்கின்றனர்.மிகச் சிலரே துளசி செடியினை வளர்க்கின்றனர், அதன் பயனையும் அனுபவித்து வருகின்றனர்.
ஆனால், எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய முதன்மையான செடி, துளசி செடிதான்.
துளசிச் செடியினை வளர்க்க பெரிய இடமோ , பராமப்பரிதற்கு நிறைய நேரங்களோ , அதிக செலவோ தேவையில்லை.

துளசி செடி வளரும் தன்மை:
அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம்
வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண் தேவை.
வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.
துளசி செடியின் பயன் தரும் பாகங்கள்:
இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.
துளசி செடியின் பயன்கள்:
தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம்.
இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது.
துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது.
வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு.
இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும்.
சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.
இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும்.
இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும்.
மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது.
தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.

வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.
வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.
துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது.
துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.
ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.
நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.

மரு‌ந்து மா‌த்‌திரை மூல‌ம் செ‌ய்ய முடியாததை இ‌ந்த அருமரு‌ந்தான துள‌சி செ‌ய்து‌விடு‌ம்.
இன்று பலவகையான மருந்துகளில் துளசி சேர்க்கப்படுவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் அப்படின்னு இன்னும் எத்தனை எத்தனை காய்ச்சல் நம்மை வதைக்க வருகிறதோ தெரியவில்லை.

தொடர்ந்து நாம துளசி உபயோகிசிகிடு வந்த...இந்த மாதிரி நோய்கள், காய்ச்சலில் இருந்து போராட உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

Tuesday, September 22, 2009

புற்று நோய் - ஒரு விரிவான விளக்கம்

புற்றுநோய் (Cancer) கட்டுப்பாடற்று செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின்

வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலை நாடுகளில் இறப்பிற்கான முதன்மைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

பொருளடக்கம்

புற்று நோய் - ஒரு விரிவான விளக்கம்

செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். உடலானது பல வகையான செல்களால் உண்டாக்கப்பட்டுள்ளது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உண்டுபண்ணுகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறக்காமல் இருக்கின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி (க்ரோத்) அல்லது கழலை (டியூமர்) எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.

எல்லாக் கழலைகளும் (டியூமர்) புற்று நோய் போன்றவையல்ல. கழலைகள் தீங்கில்லா கழலைகள் (பினைன் டியூமர்ஸ்) மற்றும் கேடுவிளைவிக்கும் கழலைகள் (மாலிக்கண்ட் டியுமர்ஸ்) என இருவகைப்படும்.

தீங்கில்லா கழலைகள் என்பவை புற்றுநோய் அல்ல. அவைகளை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவை நீக்கின பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லா கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை.

கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளைவிக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாக மற்றும் எந்த கட்டுப்பாடுமின்றி பிரிவுற்று பெருகும். இப்படி ஏற்பட்ட புற்றுநோய் செல்கள் இதனை சுற்றியுள்ள திசுக்களுக்குள் சென்று அவற்றை அழித்துவிடும். புற்றுநோய் செல்கள் கேடு விளைவிக்கும் கழலைகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்து இரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்துவிடும்.

இரத்த நாளங்கள் (ஆர்டரி-தமனி, வெய்ன்-சினை, கேட்டல்லரி-நுண்ணாளி) மூலம் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. நிணநீர் மண்டலம் (லம்பாடிக் சிஸ்டம்), நிணநீர் மற்றும் இரத்த வெள்ளை அணுக்களை, நிணநீர் நாளங்கள் உடலில் உள்ள எல்லா திசுக்களுக்கும் எடுத்துச் செல்லும். கேடு விளைவிக்கும் கழலை உடைந்து, அதிலிருந்து வெளிவரும் புற்றுநோய் செல்கள், இரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் மண்டலத்தின் மூலம் மற்ற உடல் உறுப்புகளுக்குச் சென்று அப்பகுதியில் கழலைகளை ஏற்படுத்துகிறது. இவ்வாறு புற்று நோய் பரவுவதை திசுத்தொற்று (மெடாஸ்டாஸிஸ்) என்பர்.

புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப்பழக்கம், சில உணவுகள், வெளிப்படும் புறஊதாக்கதிர் (இன்னமும் எழுதப்படவில்லை)">புறஊதாக்கதிர்கள் அல்லது புற்றுநோய் ஏற்படக்கூடிய சூழல் உள்ள பணித்தளங்கள் போனறவற்றிற்கு உட்படும்போது இது போன்ற மாற்றங்கள் மரபிகளில் ஏற்படுகிறது. எச்.ஐ.வி "எச்.ஐ.வி நோய் தொற்றுவில் இது போன்ற திடீர் மாற்றம் ஏற்படும். சில வேளைகளில், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.

புற்றுநோய் வராமல் தடுத்துக்காக்க முடியமா?

புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்க உதவும் சில வழிமுறைகள்

* புகையிலை பயன்படுத்தக்கூடாது.
* கொழுப்பான உணவைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.
* முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

புற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள் யாவை?

புற்றுநோய் வேறுபட்ட அடையாளங்களை ஏற்படுத்தும். அவற்றில் இயல்பாக ஏற்படக்கூடிய அடையாளங்களாவன:

* மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம்
* புதிய மச்சம் அல்லது ஏற்கெனவே உள்ள மச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள்.
* குணப்படாத புண்கள்.
* கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல்.
* மலம் மற்றும் மூத்திரம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம்.
* தொடர்ந்து அஜீரணத்தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்சினை.
* விவரிக்கமுடியாத விதத்தில உடல் எடையில் மாற்றம்.
* இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு

புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி?

அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை (ரேடியேஷன் தெரப்பி), வேதி மருத்துவம் (கீமோதெரப்பி), ஹார்மோன் மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவம் போன்றவை புற்றுநோய் சிகிச்சைகளில் அடங்கும்., புற்றுநோயின் வகை, பாதிக்கப்பட்டிள்ள இடம், நோயின் பரவும் தன்மை, நோயாளியின் வயது மற்றும் பொது உடல் நலம் மற்றும் பிற காரணிகளைப் பொருத்து மேற்கூறிய ஒன்று அல்லது பல மருத்துவமுறைகளை பயன்படுத்தி மருத்துவர் சிகிச்சை அளிப்பர்.

புற்றுநோய் எப்போதும் வலியை ஏற்படுத்துமா?

புற்றுநோய் எப்பொழுதும் வலியை ஏற்படுத்தும் என்று அர்த்தமல்ல. புற்றுநோயின் வகை, நோயின் அதிகரிப்புதன்மை மற்றும் நோயாளியின் வலி பொறுத்துக் கொள்ளும் தன்மையைப் பொறுத்து வலி இருக்கும். பெரும்பாலும் புற்று நோய் வளர்ந்து, எலும்புகள், உறுப்புகள் அல்லது நரம்புகளை அழுத்தும் போது வலி ஏற்படுகிறது.


புற்று நோய் வகைகள்

புற்றுநோயில் பலவகைகள் உள்ளன. புற்றுக்கலங்கள் உள்ள இடத்தைக் கொண்டு அவை தொண்டைப்புற்றுநோய், குடல் புற்று, இரத்தப்புற்று என அழைக்கப்படுகின்றன. புகை பிடித்தல், கதிர் வீச்சுக்கு ஆட்படுதல், குடிப்பழக்கம், சில வகை நுண்மங்கள் வைரஸ் போன்றவை புற்று நோய் ஏற்படக் காரணமாக இருக்கலாம்.

* மார்பகப் புற்று நோய்
* இரத்தப்புற்று நோய்.....இன்னும் பல

இரத்தப்புற்று நோய்

லுகிமியா அல்லது லுகேமியா என்பது இரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் புற்றுநோய். இரத்த செல்கள் குறிப்பாக, வெள்ளை இரத்த அணுக்கள் இயல்புக்கு மாறாக அதிகளவில் பெருகும் நிலை காணப்படும்.

அறிகுறிகள்

* அதிகளவில் இரத்தம் வடிதல்
* இரத்தசோகை
* காய்ச்சல், குளிர், இரவுநேரத்தில் வேர்த்தல் மற்றும் ப்ளு போன்ற அடையாளங்கள்
* பலவீனம் மற்றும் சோர்வு
* பசியின்மை மற்றும் /அல்லது எடை குறைதல்
* பல் ஈறுகள் வீக்கமடைதல் அல்லது இரத்தம் வடிதல்
* நரம்பியல் சம்பந்தமான அடையாளங்கள் (தலைவலி)
* ஈரல் மற்றும் கணையம் வீக்கமடைதல்
* காயங்கள் சுலபமாக ஏற்படுதல் மற்றும் அடிக்கடி நோய்தொற்று ஏற்படுதல்
* மூட்டு வலி
* உள்நார்தசைகள் வீக்கமடைதல்

மார்பகப் புற்றுநோய்

மார்பகப்புற்று நோய் என்பது பெண்களில் ஏற்படும் பொதுவான வகை புற்றுநோயாகும். பெண்களில், மரணத்தை ஏற்படுத்தும் புற்றுநோய் வகைகளில் இரண்டாம் மிக பொதுவான காரணமாகும்.

அறிகுறிகள்

* மார்பு வீங்குதல்
* மார்புக் காம்பிலிருந்து வடிதல்
* மார்பகக் காம்பு உள் நோக்கி இழுத்தல்
* சிவந்த / வீக்கமடைந்த மார்புக் காம்பு
* மார்பகம் பெரியதாகுதல்
* மார்பு சுருங்குதல்
* மார்பகம் கல்போல் கடினமாதல்
* எலும்பு வலி
* முதுகு வலி

இடர் காரணிகள்

* குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மார்பக புற்று நோய் இருத்தல் (பெரும்பாலான நெருங்கிய உறவினர்களுக்கு)
* பெண்களுக்கு வயதாகும் போது ஆபத்து அதிகமாகிறது.
* ஏற்கெனவே ஏற்பட்ட மார்பக புற்றுநோய், இயல்புக்கு மாறுபட்ட மாற்றங்கள், ஏற்கெனவே உள்ள மார்பக நோய்கள்.
* மரபுவழிக் கோளாறு அல்லது மாற்றங்கள் (அரிதான மாற்றங்கள்)
* 12 வயதிற்கு முன்பாகவே வயதுக்கு வருதல்
* குழந்தை இல்லாமை.
* மது வகைகள், அதிக கொழுப்பான உணவு, அதிக நார்பொருள் உள்ள உணவு, புகைப்பழக்கம், உடற்பருமன் மற்றும் ஏற்கெனவே உள்ள கருவக அல்லது பெருங்குடல் புற்றுநோய்.

சிகிச்சை முறை

மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை, மூன்று முக்கிய காரணிகளைப் பொறுத்துள்ளது:

* பெண்ணுக்கு மாதவிடாய் காலங்கள் நின்றுவிட்டதா?
* மார்பகப் புற்றுநோய் எந்த அளவு பரவியுள்ளது?
* மார்பகப் புற்றுநோய் செல்லின் வகை.


புற்றுநோய் எந்த அளவு பரவியுள்ளது என்பதை கீழ்க்கண்டவாறு வரையறை செய்யப்பட்டுள்ளது:

* புற்று நோய் எந்த இடத்தில் உள்ளது?
* எந்த அளவு புற்றுநோய் நிணநீர் சுரப்பி கணுக்களுக்கு பரவியிருக்கிறது?
* புற்றுநோய் மார்பகத்தின் உள்பகுதியில் உள்ள தசை வரை பரவியுள்ளதா?
* மற்றொரு மார்பகத்திற்கும் புற்றுநோய் பரவியிருத்தல்
* புற்றுநோய் மற்ற உடல் உறுப்புகளுக்கு பரவியிருத்தல் உ-ம் எலும்பு அல்லது மூளை

புற்றுநோய் செல்களின் வகையைப் பொறுத்து சிகிச்சை முறை வேறுபடுகிறது

* மோர் ஆக்ரஸிவ் செல் (அதிக ஆக்கிரமிக்கும் செல்)
* லெஸ் ஆக்ரஸிவ் செல் (குறைவாக ஆக்கிரமிக்கும் செல்)

மேற்கூறிய காரணிகளின் அடிப்படையில் மருத்துவர்கள் என்ன செய்யலாம் என முடிவு செய்வர்:

* கதிர்வீச்சு மருத்துவத்தினை பயன்படுத்தி அல்லது பயன்படுத்தாமல் வீக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள திசுக்களை அகற்றுவது.
* முழு மார்பக பகுதியையும் அகற்றுவது.

தடுத்துக் காத்தல்

* மாதாமாதம் மார்பகத்தினை தற்பரிசோதனை செய்தல்.
* உங்கள் மருத்துவரிடம் வருடத்திற்கு ஒரு முறை சென்று மார்பகப் பரிசோதனை செய்தல்.
* சத்தான உணவுகளை உட்கொள்ளுதல்.

உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்குமோ என சந்தேகம் ஏற்படும்போது உடனடியாக மருத்துவரை அணுகவும். மார்பகப் புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தக்கூடிய ஒன்று. ஆனால் கண்டறியப்படவில்லையென்றால் மரணத்திற்கு நேராக வழி நடத்தும்.



Wednesday, August 19, 2009

ஒன்பது கிரகங்களிலும் உங்கள் வயதினை அறிந்துகொள்ளுங்கள்

ஒன்பது கிரகங்களிலும் உங்கள் வயதினை அறிந்துகொள்ளுங்கள்
நிங்கள் மற்ற கிரகங்களில் வசித்தால் தற்பபோதைய உங்கள் வயது மற்றும் எடை என்ன?
உங்களால் கணக்கிட முடியுமா? மிக கடினமான செயல் இது அனால் இவை தப்போது எளிமையாக அறிந்து கொள்ள வழி இருக்கிறது.
வயதை அறிய http://www.exploratorium.edu/ronh/age/
எடையினை அறிய http://www.exploratorium.edu/ronh/weight/index.html
இத் தளத்தில் சென்று உங்களது தற்போதய வயதினை கொடுத்தல் போதும் மற்ற கிரகங்களின் வயதை அவை ஒரு நொடியில் உங்களுக்கு காட்டிவிடும்.
உடனே சென்று அறிந்து கொள்ளுங்கள்.

இணையத்தில் இலவச டைரி



தினமும் டைரி எழுதும் பழக்கம் உள்ளவரா நீங்கள் ?
ஆம் எனில் நிச்சயம் இது உங்களுக்கான தகவல் தான் இனி காகிதம், மை கொண்டு மறைந்து மறைந்து எழுத வேண்டிய அவசியம் இனி இல்லை.
யாரேனும் படிதுவிடுவர்களோ என இனி அஞ்சத் தேவையில்லை.
http://www.penzu.com/ இந்த தளத்தில் இலவச உறுப்பினர் ஆகி உங்கள் டைரியை பக்கம் பக்கம்மாக எழுதி தள்ளுங்கள். மரத்தால் ஆன காகிதங்களுக்கு விடை கொடுங்கள்.

மூளை ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் !




வலிப்பு நோய், பக்கவாதம் ஆகியவை மட்டுமல்ல... அடிக்கடி வருகிற தலைவலியும்கூட சில சமயங்களில் மூளையில் ஏற்படும் பிரச்னைக்கான அலாரம்தான். தொடர் தலைவலி என்றால் தவறாமல் டாக்டரிடம் காட்டிவிடுங்கள்!


மூளை தொடர்பான எந்த வியாதியாக இருந்தாலும் டாக்டரின் சிகிச்சையைவிட நாம் ஏற்படுத்திக் கொள்ளும் சூழல் மிக முக்கியம். கோப,தாபங்களிலிருந்து விலகியிருக்கப் பழக வேண்டும், பொறாமை, பேராசை, வன்மம் போன்ற நெகட்டிவ் உணர்வுகளை அண்டவே விடக்கூடாது!


அளவுக்கு மீறிய மன உளைச்சல் மொத்தமாக நரம்பு மண்டலத்தையும் ரத்த ஓட்டத்தையும் காவு வாங்கக்கூடியது. முறையான உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் உளைச்சலில் இருந்து ஓய்வு கொடுக்கும். நடப்பது நடந்தே தீரும் என்ற தத்துவார்த்த அணுகுமுறையை விழிப்பு உணர்வோடு கடைப்பிடிக்க ஆரம்பித்தால் பிரச்னைகளைப் பதறாமல் அணுக முடியும்!


சுறுசுறுப்பாக வேலை பார்த்துவிட்டு ஓய்வு பெற்றவர்களை, போதும் உழைச்சது, சும்மா உட்கார்ந்து நிம்மதியா ரெஸ்ட் எடுங்க' என்று முடக்கிப் போடக்கூடாது. "சும்மா' என்பது மூளையைப் பொறுத்தவரை சைத்தான். எதிர்மறையான விஷயங்களை மட்டுமே நினைக்க வைத்து, அதிலேயே மூழ்கடித்து, பல மன வக்கிரங்களுக்கும் உடல் உபாதைகளுக்கும் வெற்றிலைத் தாம்பூலம் வைத்துவிடும்!


ஞாபக மறதி அன்றாட வாழ்க்கையின் நடைமுறைகளைப் பாதிக்கிற அளவுக்குப் போனால் உஷாராகிவிடுவது உத்தமம். அடுத்தவர்களால் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிற அளவுக்கான ஞாபக மறதி என்பது மூளையில் ஏற்படும் ஏதோவொரு ரிப்பேரின் விளைவுதான்!


கூடுமானவரையில் பிரச்னைகளைத் தொலைபேசி மூலம் தீர்த்துக்கொள்ள முனையாதீர்கள். வெறும் குரல்கள் எப்போதுமே நம் மனப்பாங்கை எதிராளிக்கு முழுமையாகக் காட்டாது. தவறான புரிந்து கொள்ளுதலால் பரஸ்பரம் எரிச்சலும் விரக்தியும் அதிகமாகிப் போகும். மூளை சூடேறி வரிசையாகப் பல விளைவுகளை நம் உடலில் காட்டும்.


ஓய்வு பெற்றாலும் பிஸியாகவே இருந்தாலும் ஒவ்வொரு மனிதனும் தன் மன அமைதிக்கு ஏற்ற புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். புத்தகங்களைப் போல் ஒரு நல்ல நண்பன் மூளைக்குக் கிடைக்கவே முடியாது. ஆன்மிக நாட்டம் கொண்டவர்களுக்கு அது தொடர்பான புத்தகங்கள் மிகப் பெரிய வரப்பிரசாதம்!

மூளை, மனம் என்ற சித்தாந்தத்துடன் சம்பந்தப்பட்ட மருந்து.எனவே மனோரீதியான அணுகுமுறைகள் மூலமாக மூளையை அரோகியமாக வைப்பது சாத்தியம்.