
டிஜிட்டல் கேமரா மூலம் புகைப்படங்கள் எடுக்கும் போது MB கணக்கில் அவை அளவில் பெரியதாக இருக்கும். அவற்றை ஈமெயில் மூலமாக அனுப்பும் போது அதிக நேரம் பிடிக்கும். பெரிய படங்களை மைக்ரோசாப்ட் வோர்ட் , பவர்பாய்ண்ட் போன்றவற்றில் உபயோகிக்கும் போதும் அதிக இடம் பிடித்து கொள்ளும். இது போன்ற சமயங்களில் படங்களின் அளவை குறைக்க வேண்டி இருக்கும். சாதாரணமாக இதனை செய்ய போடோஷோப் , பெயிண்ட் போன்ற மென்பொருள்கள் மூலம் படத்தை திறந்து, படத்தின் அளவை குறைத்து மீண்டும் புதிய பெயரில் சேமிப்போம். நேரம் அதிகம் விரயம் ஆகும்.
தற்போது திறக்காமலே வலது கிளிக் மூலம் அந்த படத்தை சிறிதாக்க முடியும். இதற்கானஇலவச மென்பொருளை இங்கே கிளிக் செய்து தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
இனி நீங்கள் படத்தை உபயோக படுத்தும் போது அந்த படத்தின் Thumbnail மீது வலது கிளிக் செய்தால் தோன்றும் மெனுவில் "Resize Pictures" என்ற புதிய ஆப்சன் இருக்கும்.
நிறைய படங்களை ஒரே நேரத்தில் அளவை குறைக்க விரும்பினால், படங்கள் உள்ள போல்டரை ஓபன் செய்து வேண்டுமென்ற படங்களை செலக்ட் செய்து கொண்டு வலது கிளிக் மூலம் "Resize Pictures" கொடுக்கவும்.
அளவு குறைக்கப்பட்ட பின்பு படத்தின் தெளிவில் பெரிய மாற்றம் இருப்பதாக தெரியவில்லை. நன்றாகவே உள்ளது. உதாரணத்திற்கு இந்த விவரங்களை பாருங்கள்
1. 4368x2912 ஒரிஜினல் படம் - 1.21 MB
2. 640x426 அளவில் சுருக்கப்பட்ட படம் - 55.6 KB
3. 800x533 அளவில் சுருக்கப்பட்ட படம் - 71.0 KB
4. 1024x682 அளவில் சுருக்கப்பட்ட படம் - 95.8 KB
Thanks to: tvs50.blogspot.com
No comments:
Post a Comment