ஒருவரின் பிறந்த ராசி, நட்சத்திரம் மற்றும் ஜாதகத்தை வைத்து அவரின் குணநலன்களையும், எதிர்காலத்தையும் கூறி வருகிறார்கள்.
இன்றைய நவீன உலகில் ஒருவரின் பெயரை வைத்தே அவரின் நற்குணங்களையும் எதிர்கால வாழ்க்கையையும் கூற முடியும். ஒருவரின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவரின் குணங்களை கூற முடியும்.
பெயரின் முதல் எழுத்திற்கான பலன்கள்:
A - அறிவாற்றல், நிர்வாகத்திறன் கொண்டவர்களாக இருப்பர்.
B - சிந்தனை மற்றும் கற்பனை திறன் அதிகம் இருக்கும்.
C - உழைப்பின் மேன்மை, மன வலிமை, ஆட்களை வேலை வாங்குதல் ஆகிய திறமைகள் இருக்கும்.
D - அயரா உழைப்பு, பணிவு ஆகிய நற்பண்புகள் இருக்கும்.
E - எவரையும் அரவணைத்துச் செல்லுதல், நற்சிந்தனை இருக்கும்.
F - துணிவான செயல், சலியாத உழைப்பு கொண்டிருப்பர்.
G - ஆர்வம், தொண்டு, உழைப்பு என்ற உயரிய பண்புகளை கொண்டிருப்பர்.
H - நிர்வாகத்திறன், பணியிலே பெருமை கொண்டிருப்பர்.
I - அஞ்சாமை, சலியாத உழைப்பு கொண்டு எதிர் நீச்சல் போட்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவர்.
J - சஞ்சலம், சலனம், கலையார்வம் கொண்டவர்களாக விளங்குவர்.
K - உழைப்பு, மகிழ்ச்சி, உதவும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பர்.
L - வாக்குவன்மை, எதிலும் வெற்றி பெறுவர்.
M - கலை உள்ளம் கொண்டிருப்பர். சுய முயற்சியால் வெற்றி பெறுவர்.
N - இரக்கம், பிறருக்குதவி ஆகிய நற்பண்புகளை கொண்டிருப்பர்.
O - ஆழ்ந்த சிந்தனை, அறிவாற்றல் மிக்கவர்களாக இருப்பர்.
P - வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுவர். பேச்சுவன்மையால் எங்கு சென்றாலும் பிரகாசிப்பர்.
Q - எடுத்ததை முடிக்கும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பர்.
R - ஆன்மீகம், பொது மக்கள் தொடர்பு மிக்கவர்களாக இருப்பர்.
S - சினம், சிந்தனை, நல்ல மனம் கொண்டவர்களாக விளங்குவர்.
T - முயற்சியில் வெற்றி, மனோ வலிமை மிக்கவர்களாக இருப்பர்.
U - நெறிமுறைகளை கடைபிடித்து தெய்வீக சிந்தனையுடன் இருப்பர்.
V - தன்னம்பிக்கை கொண்டிருப்பர். பிறருக்கு உதவும் மனம் இருக்கும்.
W - கலங்காத உள்ளம் கொண்டிருப்பர். எதிலும் பொறுமையைக் கடைபிடிப்பர்.
X - பேச்சுக் கவர்ச்சி, உதவும் மனப்பான்மை அதிகமாக இருக்கும்.
Y - மறைமுக எதிர்ப்பு, பயந்த நிலை கொண்டவர்களாக இருப்பர்.
Z - பேச்சுத்திறன் இருக்கும். செயல்கள் சிறப்பானவை.
Get Clearer Skin With These Clever Tips!
6 years ago
No comments:
Post a Comment