Monday, February 2, 2009

மருத்துவக் குறிப்புகள் பலவிதம்

இன்றைய காலத்துக்கேற்ற நவீன மருத்துவக் குறிப்புகள் இவை. பின்பற்றி பாருங்களேன்.

* சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும்போது, மொபைல் ஃபோனில் பேசுவதை தவிருங்கள்.

* பொதுவாக மொபைல் ஃபோனில் பேசுவதற்கு இடதுபக்க காதை பயன்படுத்துங்கள்.

* மொபைல் ஃபோனில் காதுக்கருவியை (இயர் ஃபோன்) அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம். அரை மணி நேரத்திற்கு ஒருமுறையாவது காதுக்கு ஓய்வு கொடுங்கள்.

* கணிணி முன் அமர்ந்து வேலை செய்யும்போது, அடிக்கடி எழுந்து, நடந்து முதுகு தண்டுவடத்தை ரிலாக்ஸ் செய்யுங்கள்.

* கம்ப்யூட்டர் திரையை தொடர்ந்து பார்ப்பதை தவிருங்கள். 20 நிமிடத்திற்கு ஒருமுறை பார்வையை வேறுபக்கம் திருப்பி கண்களுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்கள்.

* தினமும் இரு முறைக்கு மேல் காபி அல்லது டீ குடிப்பதை தவிருங்கள்.

* அதிகாலை தூங்கி எழுந்ததும் அதிகளவில் குளிர்ந்த நீரை பருகுங்கள்.

* தினமும் காலை, மாலை நடைப்பயிற்சி செய்யுங்கள். காலையில் நேரம் கிடைக்காதவர்கள் மாலையில் மட்டுமாவது நடை பயிற்சி செய்யுங்கள்.

No comments: