Friday, May 2, 2014

ஹெல்த் பழமொழியும் அதன் பொருளும்


1. அகப்பை குறைத்தால் கொழுப்பை அடக்கலாம்.

அகப்பையான இரைப்பைக்குச் செல்லும் உணவை அளவு மற்றும் திறனறிந்து குறைத்தால் மட்டுமே கொழுப்பை அடக்கலாம்.

2. உப்பு அறியாதவன் துப்பு கெட்டவன்

உணவில் அளவோடு உப்பு சேர்த்தால் பசியைச் சீராக்கும். ஜீரணிக்கும். அதிகப்பட்டால் உமிழ்நீரை அதிகரித்து குமட்ட வைக்கும்.

3. இன்று விருந்து நாளை உபவாசம்

இப்படி இருந்தால் வயிற்று உப்புசம், செரியாமை, அதைத்தொடரும் வயிற்றுப்புண் நோய்களைத் தவிர்க்க முடியும். உபவாசம் என்றால் பட்டினியிருத்தல் மட்டுமல்ல. தேவைப்படின் பழஆகாரம் சாப்பிடுவதும்தான்.

4. கடுக்காய்க்கு அக நஞ்சு; இஞ்சிக்கு புற நஞ்சு

கடுக்காயைப் பயன்படுத்தும்போது உள்ளிருக்கும் கொட்டையை நீக்கிவிட வேண்டும். இஞ்சி, சுக்கு உபயோகிக்கும் போது அதன் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.

5. எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளைத் தாய்க்கும் எட்டே கடுக்காய்.

மலச்சிக்கலுக்கும் அண்மையில் பிரசவித்த தாய்க்கும் உள் மூலத்துக்கும் கடுக்காய் ஒரு சிறந்த மருந்து, மலத்தை இளக்க கடுக்காய்ப் பிஞ்சை பயன்படுத்தவேண்டும்.

6. எருதுக்குப் பிண்ணாக்கு, ஏழைக்கு கரிசாலை.

எருதுக்கு உணவாக அமையும் பிண்ணாக்கு போல, ஏழைக்கு எளிதில் கிடைக்கும் உணவு கரிசாலைக் கீரை. குறைந்த விலையில் நல்வாழ்வு தரக்கூடியது. 

7. பொன்னை எறிந்தாலும் பொடிக்கீரையை எறியாதே.

பொன்னால் அழகு சேர்க்க முடியும். பொடிக் கீரைதான் ஆரோக்கியம். அதிலும் பொன்னாங்கன்னிக்கீரை தங்கச் சத்து உடையது.

8. வாழை வாழ வைக்கும்: 

வாழைப்பழம் உடலைத் தேற்றும் வாழைக்காய் மந்தம் என்றாலும் அளவறிந்து சாப்பிட்டால் உடலுக்கு ஊட்டம் தரும். சிறுநீரகக் கல்லை வாழைப்பூ நீக்கும். சிறுநீரை வாழைத்தண்டு பெருக்கும்.

9. வெங்காயம் உண்போருக்கு தங்காயம் பழுதில்லை: 

உடல் இயந்திரத்துக்கு வரும் முக்கிய நோயான உயர் ரத்த அழுத்தத்தை வெங்காயம் கட்டுப்படுத்தும்.

10. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி நிவாரணியாக செயல்படும்.

11. உடம்பை முறித்துக் கடம்பில் போடு

உடல் வலியைப் போக்கி ஓய்வையும் உறக்கத்தையும் இயல்பிலேயே வரவழைக்கும் தன்மை கடம்பு மரத்திற்குத்தான் உண்டு.

12. அறுகம்புல்லும் ஆபத்துக்குதவும்:

திடீர் வண்டுக்கடி, ஒவ்வாமை என்ன கடித்ததென்றே தெரியாமை இவற்றிற்கு அறுகம்புல் ஒரு நச்சு நீக்கி, இது விஷத்தை முறிக்கும் தன்மையுடையது. 

13. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு:

பெண்கள் அளவுக்கதிகமாக சாப்பிட்டால் அவர்களின் இடைப்பகுதி பெருத்து அழகுகெட்டுவிடும்.

14. ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்ரை. 

கரும்பில் இருந்துதான் சர்க்கரை என்றல்ல இலுப்பைப் பூவையும் சர்க்கரையாக பயன்படுத்து வோர் உண்டு.

நன்றி குமுதம் 

Wednesday, July 6, 2011

மருத்துவ குறிப்புகள்

 • ருசியின்மையைப் போக்குபவை : புதினா , மல்லி , கறிவேப்பிலை , நெல்லிக்காய் , எலுமிச்சை , மாவடு , திராட்சை , வெல்லம் , கருப்பட்டி , மிளகு , நெற்பொறி
 • சிவப்பணு உற்பத்திக்கு : புடலைங்காய் , பீட்ரூட் , முருங்கைக்கீரை , அவரை , பச்சைநிறக் காய்கள் , உளுந்து , துவரை , கம்பு , சோளம் கேழ்வரகு ,பசலைக்கீரை
 • மருந்தை முறிக்கும் உணவுகள் : அகத்தி , பாகற்காய், வேப்பிலை , நெய் , கடலைப்பருப்பு , கொத்தவரை , எருமைப்பால் . சோம்பு , வெள்ளரிக்காய்
 • விஷத்தை நீக்கும் உணவுகள் : வெங்காயம் , பூண்டு , சிறுகீரை , வேப்பிலை , மிளகு , மஞ்சள் , காயம்பித்தம் தணிப்பவைசீரகம் , கருப்பட்டி , வெல்லம் , சுண்டைவற்றல் செவ்விளநீர் , அரைக்கீரை , எலுமிச்சை
 • நெஞ்சு சளி : தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 
 • தலைவலி : ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 
 • வாய் துர்நாற்றத்தால் சங்கடமா? : எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய்துர்நாற்றம் நீங்கும்.
 • தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? : வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க, முடி வெளியேறி பேதியும் நிற்கும். 
 • வேனல் கட்டி தொல்லையா?  : வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும். 
 • தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அண்டாது. 
 • பொன்னாங்கண்ணி கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். உடம்பில் உள் சூடும் குறையும். இக்கீரையின் தைலத்தை தலை முழுகப் பயன்படுத்தி வந்தால் கண் நோய் அண்டாது. உடல் சூடு தணியும். 
 • அரைக் கீரை தைலமும் உடல் சூட்டைத் தணிக்கும். 
 • பாகற்காய் வற்றலை உணவுடன் உண்டு வந்தால் மூலம், காமாலை நோய் தீரும்.
 • ஹோட்டல்களில் சாப்பிடுவதால் ஏற்படும் நாக்குப் பூச்சித் தொல்லை, சிறுவர்களுக்கு ஏற்படும் வயிற்றுப்பூச்சித் தொல்லை நீங்க சுண்டைக்காயை உணவுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும். 
 • இரவு உணவில் சுண்டைக்காய் வற்றலை சேர்த்து வந்தால் ஆஸ்துமா, நெஞ்சு சளி, காச நோய் நீங்கும். வயிற்றுப் போக்கும் நிற்கும். 
 • கற்கண்டு, இஞ்சி சாறு சேர்த்து அருந்திவர நீரிழிவு நோய் கட்டுப்படும்.
 • இஞ்சி ஊறுகாய் ஜீரணத்துக்குப் பயன்படும். பித்தத்தைத் தணிக்கும். 
 • மருதாணி இலையை எலுமிச்சைச் சாற்றில் கலந்து அரைத்து கட்டினால் குதிகால் வாதம், பாத எரிச்சல் தீரும். 
 • வெள்ளை கரிசலாங் கண்ணி தைலத்தைத் தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கறுக்கும். 
 • கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழா நெல்லி ஆகிய இலைகளை சம அளவில் அரைத்து பாக்கு அளவில் எடுத்து மோரில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 
 • கீழாநெல்லி செடியின் வேரை பசுமையாக 20 கிராம் எடுத்து அரைத்து பால், தயிர், மோர் என ஏதாவது ஒன்றுடன் கலந்து பருகினால் கை, கால் வலி நீங்கும். தேனில் கலந்து பருகி வர அம்மை நோய் தணியும்.
 • அரச இலையை அரைத்து பூசி வந்தால் கால் வெடிப்பு, ரணம் குணமாகும். 
 • அகலில் வேப்பெண்ணெயை விட்டு இரவில் எரித்து வந்தால் கொசுக்கள் பறந்துவிடும். 
 • துளசி இலையை வாயில் போட்டு மென்று தின்றால் பல் வலி, கூச்சம் நீங்கும். சில இலைகளைக் கசக்கி முகர்ந்து பார்த்தால் மூக்கடைப்பு நீங்கும். 
 • பிஞ்சு வில்வக் காயை அரைத்து தயிரில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி, ரத்த பேதி குணமாகும். 
 • அறுகம்புல்லை அரைத்து காய்ச்சிய பாலில் கலந்து தினமும் காலையில் பருகி வந்தால் ரத்த மூலம் நிற்கும். 
 • வேப்பிலையை அரைத்து கட்டி வந்தால் ஆறாத ரணமும் ஆறும். உடையாத பழுத்த கட்டியும் உடையும். 
 • வேப்பங்கொட்டையினுள் உள்ள பருப்பை மை போல் அரைத்து வெந்நீரில் கலந்து குடித்தால் நஞ்சு நீங்கும்.
 • முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்து வாட்டுகிறதா? 
 • ஆரஞ்சு விழுது இருக்க கவலையேன்.
 • ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது - 1 டீஸ்பூன்,சந்தனப் பவுடர் - 2 சிட்டிகை... 
 • இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். 
 • தினமும் இரவு தூங்கப் போகும்போதுபருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.க‌றிவே‌ப்‌பிலையை சா‌ப்‌பிடுவதா‌ல் எற்படும் நன்மைகள்
 • நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையு‌ம், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல், ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம்.
 • வெறும் வயிற்றில் ‌தினமு‌ம் கறிவேப்பிலை இலையை மெ‌ன்று சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். இ‌ப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். சிறுநீரில் சர்க்கரை வெளியேறு‌ம் அளவு‌ம் குறை‌ந்து‌விடு‌ம்.
 • இளம‌் வய‌தி‌ல் நரைமுடி வ‌ராம‌ல் தடு‌க்க க‌றிவே‌ப்‌பிலை பய‌ன்படு‌ம் எ‌ன்பது தெ‌ரி‌ந்த ‌விஷய‌ம். ஆனா‌ல் தெ‌ரியாத ‌விஷய‌ம் ஒ‌ன்று உ‌ள்ளது. அதாவது, நரைமுடி வ‌ந்தவ‌ர்களு‌ம், உண‌விலு‌ம், த‌னியாகவு‌ம் க‌றிவே‌ப்‌பிலையை அ‌திகமாக சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் நரைமுடி போயே போ‌ச்சு.தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
 • ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
 • முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
 • பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
 • நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
 • கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
 • தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
 • வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
 • இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
 • கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
 • இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.
 • ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
 • முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
 • மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.
 • பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
 • ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
 • பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
 • தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
 • தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும
 • தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.1. மாம்பழம்: முக்கனிகளில் முதன்மையானது. இதில் உயிர்சத்து 'A' உள்ளதால் நல்ல கண் ஒளி தருகிறது. இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதினால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.
 • வாழைப்பழம்: தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது.
 • முகம் வழுவழுப்பாக இருக்க: கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு தரும்.
 • இரத்த சோகையை போக்க: பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்.
 • கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது: தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.
 • குழந்தைகளுக்கு: குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.
 • உடல் சக்தி பெற: இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.
 • வெட்டுக்காயம் குணமாக: நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.
 • சுகப்பிரவசமாக: ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும். 
 • உடல் அரிப்பு குணம் பெற: வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.
 • காதில் சீழ்வடிதல் குணமாக: வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.
 • நெஞ்சுவலி குணமாக: அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திப்பழம் இருதயத்தை பலப்படுத்துகிறது. 
 • சிலந்தி கடிக்கு மருந்து: தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும்.
 • சீதபேதி குணமாக: புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிடி சீதபேதி குணமாகும்.
 • வயிற்று நோய் குணமாக: சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று நோய் குணமாகும். 
 • காது வலி குணமாக: வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.
 • நுரையீரல் குணமாக: நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.
 • பேதி குணமாக: மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும். 
 • வாதநோய் குணமாக: குப்பைமேனி இலை சாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.
 • மலச்சிக்கல் சரியாக: அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
 • மேகரோகம் குணமாக: ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும். 
 • நீரழிவு நோய் குணமாக: மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 1 கரண்டி வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.
 • இரத்த பேதியை குணப்படுத்த: அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை ஆகியவற்றை சமஅளவு பொடிசெய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீத பேதி குணமாகும்.
 • மூட்டுவலி குணமாக: அத்திப்பாலை பற்று போட்டு வர மூட்டு வலி குணமாகும். 
 • நரம்பு தளர்ச்சி நீங்க: தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.
 • பற்கள் உறுதியாக இருக்க: மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.
 • சேற்றுபுண் குணமாக: காய்ச்சிய வேப்பெண்ணெய் தடவி வர சேற்று புண் குணமாகும். 
 • மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த: வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400 மில்லி, அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி வீதம் ஆறு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
 • வயிற்றுவலி குணமாக: குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.
 • வயிற்று பூச்சிகள் ஒழிய: வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் 1 கரண்டி தேன் சேர்த்து கலக்கி காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட வயிற்று பூச்சிகள் தொந்தரவு இராது. 
 • மலச்சிக்கல் தீர: பேயன் வாழைப்பழம் தோலுடன் பில்லையாக நறுக்கி பனங்கல்கண்டு சேர்த்து ஆமணக்கு எண்ணெய்யில் ஊற வைக்கவும் போத்தலை அன்றாடம் வெயிலில் வைக்கவும். 3 நாட்கள் ஊறிய பின் தினசரி 1 வில்லை எண்ணெய்யுடன் உட்கொள்ளவும். மலச்சிக்கல் தீரும்
 • குழந்தைகளுக்கு கண் சூடுதனிய: நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர கண்சூடு குணமாகும்.
 • இரத்தத்தை சுத்தப்படுத்த: இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும். 
 • கக்குவான் இருமல் குணமாக: நாயுறுவி கதிர், 1 சீயக்காய், 1 மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி கொதித்தவுடன் இறக்கி வைத்து கொள்ளவும். காலை, மாலை 1/2 டம்ளர் கொடுக்க குணமாகும்.
 • இரத்தம் உறைதல் குணமாக: நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் உறைவதை தடுக்கலாம்.
 • சொறி சிரங்கு குணமாக: கீழாநெல்லி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்க சொறி சிரங்கு குணமாகும். 
 • சளி மூக்கடைப்பு தீர: கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும்.
 • தலைவலி குணமாக: குப்பைமேனி சாறு தடவ தலைவலி குணமாகும்.
 • இரத்த கொதிப்பு குணமாக: அகத்தி கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு ஏற்படாது. 
 • கண்வலி வராமல் தடுக்க: எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும். எத்தனை பூக்கள் விழுங்குகின்றமோ அத்தனை வருடம் கண்வலி வராது.
 • தொண்டை கரகரப்பு நீங்க: பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.
 • குடல்புண் குணமாக: மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வரவும். 
 • கால்பித்த வெடிப்பு: அரசமரத்து பாலை பித்தவெடிப்பு மீது தடவிவர குணமாகும்.
 • இரத்தம் சுத்தமாக: தினசரி இலந்தை பழம் சாப்பிடுங்கள். இலந்தை பழம் இரத்தத்தை சுத்திகரித்து சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு உண்டாகும். பசியை தூண்டும்
 • முடிவளர்வதற்கு: கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வரவும். தலைமுடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் வளர்ந்து வரும். 
 • செருப்புக்கடி குணமாக: தென்னை ஓலையை தனலில் போட்டு கருக்கி பட்டு போல தூள் செய்து தேங்காய் எண்ணெய்யில குழப்பி பூசி வந்தால் மூன்றே நாளில் குணமாகும்.
 • கருப்பு முடியாக மாற்ற: காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வதை தடுக்கும்.
 • தொழுநோய் குணமாக: கடுக்காய் வேர், பட்டை இலை, பூ உலர்த்தி இடித்து சலித்து காலை, மாலை 1/2 கரண்டி பசும்பாலில் கலந்து உண்டு வர தொழுநோய் குணமாகும். 
 • பல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக: ஆலமரத்து பட்டையை பட்டு போல் பொடி செய்து வைத்து கொள்ளவும். வெந்நீரில் கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து 3 மாதம் சாப்பிட்டு வர பல் நோய் நீங்கும். பல் ஆட்டம், ஈறுகளின் தேய்மானம் தீரும். பல் கூச்சம், வாய் நாற்றம் விலகும்.
 • சதை போடுவது குறைக்க: வாழை தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் பெருக்கம் குறையும். உடல் அழகு பெறும்.
 • தூக்கம் வர: வெங்காயத்தை நசுக்கி அதன் விந்தை 1 சொட்டு கண்ணில் விட்டால் போதும். தூக்கம் வரும். 
 • உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற: உடலில் கெட்ட நீர் உள்ளவர்கள் தினசரி பப்பாளிக் காயை சாப்பிட்டு வர துர்நீர் சிறுநீரின் வழியாகவும் வியர்வையின் வழியாகவும் வெளியேறும்.
 • கண்கள் குளிர்ச்சி: கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து பவுடராக்கி பாட்டிலில் வைத்து கொள்ளவும். தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சக்தி அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும். சளியினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.
 • வாந்தியை நிறுத்த: துளசி சாறு, கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும். 
 • பித்த வாந்தியை நிறுத்த: வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.
 • வயிற்று கடுப்பு நீங்க: அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
 • மந்தம் அஜீரணம் குணமாக: கருவேப்பிலையை உலர்த்தி பொடி செய்து மிளகு, சுக்கு, சீரகம், உப்பு பொடியாக்கி கலந்து வைத்துக் கொள்ளவும். சோற்றுடன் 1 கரண்டி பவுடர் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மந்தம் நீங்கும், மலக்கட்டு நீங்கும். 
 • சிறு நீர் எரிச்சல் குணமாக: அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
 • வாய் நாற்றம் போக: நெல்லி, முள்ளி. தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடி நீரில் ஊறவைத்து காலையில் இந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்கவும். இதனால் வாய் நாற்றம் தீரும்.
 • சர்க்கரை வியாதி நீங்க: கோவை பழம் தினசரி 1 சாப்பிட்டு வர சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். 
 • தோல் வளம் பெற: ஆலமரத்து பட்டைகளை பட்டுபோல் அரைத்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து வாரம் 1 முறை பருகி வந்தால் சரும நோய் வராது. தோலும் வளம்பெறும்.
 • வரட்டு இருமல் தனிய: எலுமிச்சம் பழச்சாறு தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.
 • கருப்பை கோளாறு நீங்க: அரசஇலை கொழுந்து 10 - 20 எடுத்து அரைத்து மோருடன் பருகி வர கருப்பையில் தங்கிய அழுக்குகள், அடைப்புகள், கட்டிகள், கிருமிகள், சதை வளர்ச்சி ஆகியவை தூய்மை அடையும்.

Thursday, September 30, 2010

கற்பூரவள்ளிகுழந்தைகளுக்கு
சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும்.இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும். கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.ஆஸ்துமா பாதிப்பிலிருந்து விடுபட
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும். இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.


சளித் தொல்லை நீங்க
மூலத்தில் சூடு இருந்தால் மூக்கினில் நீர் வரும் என்பது சித்தர் வாக்கு. மூக்கில் நீர் வடிந்து அது சில நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.புகை பிடிப்பவரா ....?
புகை நமக்குப் பகை என்ற வாசகம் போட்டு இருந்தும் புகைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. அரசு பொது இடங்களில் புகை பிடித்தலுக்கு தடை பிறப்பித்தும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. புகையினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்பட்டும் இந்நிலை மாறவில்லை. புகைப்பவர்கள் அதிகம் நுரையீரல் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதே நாளடைவில் புற்று நோயாக மாறுகின்றது.

இவர்கள் கற்புரவள்ளி இலையினை சாறெடுத்து அதை நன்கு சுண்டக் காய்ச்சி பாதியான அளவு எடுத்து வடிகட்டி அருந்தி வந்தால் புகையினால் உண்டான பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.


வியர்வை பெருக்கி
சிலருக்கு வியர்க்காமல் உடம்பு முழுவதும் படிவம் போல் காணப்படும். நமது உடலில் தோலில் பல கோடி துளைகள் உள்ளன. இவற்றின் மூலம்தான் வியர்வை சுரப்பிகள் வியர்வையை வெளியேற்றுகின்றன. இந்த வியர்வையின் மூலம் உடலில் உள்ள அசுத்த நீர் வெளியேறுகிறது.

இந்த வியர்வை நன்கு வெளியேறவும், வியர்வை சுரப்பிகள் நன்கு செயல்படவும் கற்பூரவள்ளியின் இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வியர்வை பெருகும்.


காசநோய்
காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். கற்பூரவள்ளி செடியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் ஈறாடுகால் (12 அடி விட்டம்) வரை எந்த விதமான பூச்சிகளையும் அண்ட விடாது.

சித்தர்கள் இதனை கற்பக விருட்சத்துடன் ஒப்பிடுவார்கள். இதனால் கூட இதற்கு கற்பூரவள்ளி என்று பெயர் வந்திருக்கலாம்.

வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம். நாட்டைப் பாதுகாக்கும் போர்ப்படை வீரர்களைப் போல் மனிதனை இந்த கற்பூரவள்ளி பாதுகாக்கிறது.

நாமும் நம் வீட்டில் கற்பூரவள்ளியை வளர்த்து அதன் பயனைப் பெறுவோம்

Thanks:usetamil

என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய்வரும்


வைட்டமின் A: இது, குறைந்தால் கண் பார்வை மங்கும். நோயெதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம்.
முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் A அதிகம்.

வைட்டமின் B: இது குறைந்தால் வயிற்று மந்தமும் அஜீரணமும் ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதமும் இதய பாதிப்பும் ஏற்பட சாத்தியக் கூறுகள் அதிகம். வாயில் புண் உண்டாகும்.
கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகளில் வைட்டமின் B உண்டு.

வைட்டமின் C : இது குறைந்தவர்கள் மனஅமைதி இழப்பர். சிடுமூஞ்சியாக இருப்பர். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.
ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக்காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் C வைட்டமின் அதிகம்.

வைட்டமின் D : வைட்டமின் 'D' இல்லாவிட்டால், எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் 'D' போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில்போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.
போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் 'D தயாரித்துவிடும். முட்டை, மீன், வெண்ணெய், ஆகியவற்றிலும் D வைட்டமின் உள்ளது.

வைட்டமின் E : இது குறைந்தால் தசைகள் பலவீனமடையும். E வைட்டமின் இல்லாவிட்டால் மலட்டுத்தன்மையை உண்டாக்கும்.
கோதுமை, கீரை, பச்சைக்காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் E கிடைக்கும்.

புரோட்டீன் எளிதில் கிடைக்கும் உணவுகள்:

1. பால் : ஜீரணமானவுடன் புரோட்டீன் எளிதில் கிடைத்துவிடும்.
2. சோயா : உடல் வளர்ச்சிக்கும் தசைச் செல்கள் பெருகவும் முழுமையான அளவு புரோட்டீன் இதில்தான் உள்ளது.
3. தானியங்கள் : எளிதில் கிடைக்கக் கூடிய உயர் ரக புரோட்டீன் இவற்றில் உள்ளன.
4. காளான் : அமினோ அமிலம் அதிகம் உள்ளது. உடலுக்கு மிக நல்ல புரோட்டீனைத் தரக் கூடியது. (அலர்ஜி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.)
5. நிலக்கடலை : நல்ல புரோட்டீன், உள்ளது. ஆனால் கொழுப்பு அதிகம் உள்ளது. அளவாகப் பயன்படுத்தல் வேண்டும்.வைட்டமின்கள்


1. மீன், மீன்எண்ணெய்: வைட்டமின் A,D கிடைக்கும். கருவரை, குழந்தை வளர, எலும்பு வளர பல் உறுதிபட.
2.
முட்டை : A,B,D வைட்டமின்கள் கிடைக்கும். எலும்பு, பற்கள் உறுதியாக, குழந்தை வளர.
3.
கீரை : E வைட்டமின் அதிகம் தசைகளை பலமாக்க, மலட்டுத் தன்மையை நீக்க, அமினோ அமிலம் பெற.
4.
முட்டைக் கோஸ்: A,B,E வைட்டமின் உள்ளன. கண் பார்வை கூடும். வாய்ப் புண், குடல் புண் சீராகும்.
5.
ஆரஞ்சு, திராட்சை: C வைட்டமின் அதிகம். எலும்பு, பல் ஈறு பலம் பெரும்.

Tuesday, September 28, 2010

Free Medicine for Blood Cancer!!!!


'Imitinef Mercilet' is a medicine which cures blood cancer. Its available free of cost at "Adyar Cancer Institute in Chennai". Create Awareness. It might help someone.

Forward to as many as u can, kindness cost nothing. 

Tuesday, September 21, 2010

கண் தானம் – டயல் செய்யுங்கள் 1919

கண் தானம் செய்ய விரும்புபவர்கள்
தொடர்பு கொள்ள 24 மணி  நேரமும் இயங்கும்
இலவச தொலைபேசி எண்
(MTNL TOLL FREE NUMBER)
ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த எண்  1919


Monday, August 2, 2010

God's Pharmacy! Amazing!

God first separated the salt water from the fresh, made dry land, planted a garden, made animals and fish... all before making a human. He made and provided what we'd need before we were born.. These are best & more powerful when eaten raw. We're such slow learners...

God left us a great clue as to what foods help what part of our body!

God's Pharmacy! Amazing!


Carrot
A sliced Carrot looks like the human eye. The pupil, iris and radiating lines look just like the human eye... and YES, science now shows carrots greatly enhance blood flow to and function of the eyes.
Tomato
Tomato has four chambers and is red. The heart has four chambers and is red. All of the research shows tomatoes are loaded with lycopine and are indeed pure heart and blood food.
Grapes
Grapes hang in a cluster that has the shape of the heart. Each grape looks like a blood cell and all of the research today shows grapes are also profound heart and blood vitalizing food.
Walnut
Walnut looks like a little brain, a left and right hemisphere, upper cerebrums and lower cerebellums. Even the wrinkles or folds on the nut are just like the neo-cortex. We now know walnuts help develop more than three (3) dozen neuron-transmitters for brain function.
Kidney Beans
Kidney Beans actually heal and help maintain kidney function and yes, they look exactly like the human kidneys.
Celery
Celery, Bok Choy, Rhubarb and many more look just like bones. Thes e foods specifically target bone strength. Bones are 23% sodium and these foods are 23% sodium. If you don't have enough sodium in your diet, the body pulls it from the bones, thus making them weak. These foods replenish the skeletal needs of the body.
Avocadoes
Avocadoes, Eggplant and Pears target the health and function of the womb and cervix of the female - they look just like these organs. Today's research shows that when a woman eats one avocado a week, it balances hormones, sheds unwanted birth weight, and prevents cervical cancers. And how profound is this? It takes exactly nine (9) months to grow an avocado fr om blossom to ripened fruit. There are over 14,000 photolytic chemical constituents of nutrition in each one of these foods (mo dern science has only studied and named about 141 of them).
Figs
Figs are full of seeds and hang in twos when they grow. Figs increase the mobility of male sperm and increase the numbers of Sperm as well to overcome male sterility.
Sweet Potatoes
Sweet Potatoes look like the pancreas and actual ly bal ance the glycemic index of diabetics.
Olives
Olives
 assist the health and function of the ovaries
Oranges
Oranges, Grapefruit, and other citrus fruits look just l ike the mammary glands of the female and actually assist the health of the breasts and the movement of lymph in and out of the breasts.
Onions
Onions look like the body's cells. Today's research shows onions help clear waste materials from all of the body cells. They even produce tears which wash the epithelial layers of the eyes. A working companion, Garlic, also helps eliminate waste materials and dangerous free radicals from the body.

Complete guide for Lower back pain
Complete guide for Lower back pain: causes / symptoms of low back injuries, what can i do for back pain relief, tips for preventing, best position to: sit, standing and sleeping, useful back pain exercises and golden rules.


Low Back Pain

What can cause low back injuries

what can i do for relief when i've hurt my lower back?

what else can i do for relief?

call your family doctor if

tips for preventing back strain

tips for preventing back strain 1

tips for preventing back strain 2

what's the best way to sit?

what's the best position for standing?

what's the best position for sleeping?

what's the best position for sleeping? 1

proper sleeping positions

what exercises can i do to strengthen my back?

golden rules

Thanks: Wonderfulinfo

Monday, June 21, 2010

பூமியை பசுமையாக்க உதவுங்கள் - ப்ரணவபீடம்

நண்பர்களே நம் கண் முன்னே புல்லினங்கள் அழிக்கப்படுவதை கண்டு உணர்வற்று வாழ்கிறோம். சில நிமிடங்கள் அதற்காக வருந்தினாலும் நம் வாழ்க்கையில் தாவரங்களுக்கு என்ன செய்தோம் என்ற கேள்விக்கு விடை கூற முடியாத நிலையிலேயே இருக்கிறோம்.

நமக்காக தன்னையே அர்ப்பணிக்கும் தாவர இனத்திற்கு நாம் செய்யும் தீங்குகள் பல வழிகளில் நடந்து வருகிறது. வளர்ச்சிக்கு ஏற்படுத்தும் முயற்சியை காட்டிலும் அழிவுக்கு செய்யப்படும் காரியங்கள் பன்மடங்காக இருக்கிறது.

நவீன அறிவியல், ரசாயன கழிவுகள், நவீன மயமாக்கல் மற்றும் வன அழிப்பு ஆகியவை சுற்றுசூழல் மாசு மட்டுமல்லாமல் பல தாவர இனங்களை அழித்திருக்கிறது. நம் எதிர்கால சந்தியினருக்கு எஞ்சி இருக்குமா என கேட்கும் அளவுக்கு எத்தனையோ நாசகாரியங்கள் நடக்கின்றன.

பல்வேறு நாடுகள் இதை பற்றி உணர்ந்து அதிகப்படியாக நிதி ஒதுக்கி மரங்களை நடுகிறார்கள். இது உலக அளவில் ஏற்படும் பிரச்சனை என உணர்ந்து பல நாடுகள் எல்லைகளை கடந்து பிற நாடுகளிலும் மரங்கள் நடுகிறார்கள்.

பல நிறுவனங்கள் மற்று அரசு நிறுவனங்கள் மரம் நடுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் முன்னெற்றம் என்பது மிக குறைந்த அளவிலேயே நடைபெறுகிறது. சென்ற மூன்று வருடங்களில் கோவை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பல அமைப்புகள் இணைந்து வைக்கபட்ட மரக்கன்றுகள் எண்ணிக்கை மட்டும் 15 லட்சத்தை தாண்டும்.

இன்னும் லட்சக்கணக்கான மரங்கள் நடுவதற்கு பலர் முயற்சிக்கிறார்கள்.
ஆனால் முன்பு நட்ட மரங்கள் வளர்ந்திருக்குமானால் இன்று கோவை பசுமைக் காடாக மாறி இருக்கும்.

மரங்களை கொண்டு எத்தனை லட்சங்கள் நட்டோம் என எண்ணிக்கை காட்டுவதை விட உலகுக்கு எத்தனை மரங்கள் உயிருடன் இருந்து பயன் கொடுத்தது என்பது கூறுவது முக்கியம்.

அப்படியானால் நம் பூமியை பசுமை பூமியாக்க என்ன தீர்வு?

ப்ரணவ பீடம் என்ற ஆன்மீக அறக்கட்டளை இதற்கான தீர்வை கூறுகிறது. சமுதாய மாற்றம் என்பது ஓவ்வொரு தனிமனிதனில் இருந்தும் ஏற்பட வேண்டும். இந்த கருத்தை மையமாக கொண்டு "தாய் மரம்" என்ற திட்டத்தை முன்மொழிகிறது.

மரங்கள் செழித்து வளர மரங்களுக்கு தாயாக இருந்து வளர்ச்சியூட்ட சில மரங்கள் தேவைப்படுகிறது. அத்தகைய மரங்களே தாய் மரம்.

ப்ரணவ பீடம் அறக்கட்டளையும் அதனை சார்ந்தவர்களும் பல வருடங்களாக செய்த தாவரவியல் ஆராய்ச்சியின் விளைவாக உருவான திட்டம் இது.

எளிமையாக கூறுவது என்றால் பல லட்சம் மரம் கொடுக்கும் பலனை சில நூறு மரங்களில் சாதிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.

பாரத பாரம்பரியத்தில் விருக்‌ஷ சாஸ்திரம் என்ற நூல் பின்வரும் கருத்தை கூறுகிறது. நம் சூரிய மண்டலமும் அதனை சார்ந்த கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அடிப்படையில் தாவரங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.

ஒரு இடத்தில் அனைத்து கிரகம் அல்லது நட்சத்திரங்களுக்கு உண்டான தாவரங்களை வளர்ப்பதன் மூலம் அந்த பகுதியை இயற்கை மிகுந்த சூழலாக ஆக்க முடியும். இந்த மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இயற்கை மாசு ஏற்படாது.

தற்சமயம் மிகுந்த வரும் வெப்பமடைதல் என்ற விளைவைக் குறைக்கும், மழை பெய்யும் சூழலையும் அதிகரிக்கச் செய்யும்.

இதன் செயல் வடிவம் என்ன?


உங்கள் நிலத்திலோ, வீடுகளிலோ பயன்படுத்தாத உபரி இடம் இருந்தால் மரம் நடுவதற்கு அனுமதியுங்கள்.

மரம் நடுவதற்கு ஏற்ற இடம் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதே உங்களிடம் நாங்கள் எதிர்ப்பார்ப்பது. ப்ரணவ பீடம் அறக்கட்டளை நட்சத்திர மரங்களை இலவசமாகவே வழங்க இருக்கிறது. உங்களுக்கு மரம் நடும் ஆர்வம் இருந்தால் எங்களுடன் இணைந்து கொள்ளலாம். மற்றவை இயற்கை தானாகவே பார்த்துக்கொள்ளும்.

சில இயற்கை அமைப்புக்கு உகந்த நிலையில் நட்சத்திர மரக்கன்றுகளை நடுவதன் மூலம் சுற்று சூழலை தன்வசமாக்கி மரங்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கும். அதனால்

மாசுபடுதல்குறையும் மற்றும் தாவர இனப்பெருக்கம் அதிகரிக்கும்.

இந்த பணியை இலவசமாகவே செய்கிறோம். மரக்கன்றுகள் இலவசம். முதல் சில வருடங்களுக்கு இலவச பராமரிப்பும் செய்கிறோம். குறைந்த பட்சம் 5 செண்ட் பயன்படுத்தாத இடம் தேவை. அதிகமாக எத்தனை பெரிய இடமாக இருந்தாலும் நலம்.

இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும் இப்பணியை இலவசமாக செய்ய காத்திருக்கிறோம்.

தாய் மரம் செயல்படுத்துவதால் பயன் என்ன?

சமூக ரீதியாக நல்ல மாற்றத்தை உண்டு செய்யும்.

சுற்றுச்சூழலில் மாற்றம் உருவாகும்

நோய்கள் மற்றும் நோய் பரவலை குறைக்கும்.

தனிமனித குணத்தில் நன்மையை ஏற்படுத்தும்.தாய் மரத்திட்டத்தில் முக்கிய விதிகள் உண்டா?

ஆம்.மனரீதியாக சில புரிந்துணர்வுடன் இருக்க வேண்டும்.

நீங்கள் வழங்கும் தாய்மரம் வளரக்கூடிய பூமியை குறைந்தபட்சம் 6 ஆண்டுகளுக்கு விற்பதற்கோ அல்லது மரங்களை எடுப்பதற்கோ அனுமதிக்க கூடாது.மரங்களை உங்கள் சொந்த உபயோகத்திற்கு தாராளமாக பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை வெட்டுவதோ வேருடன் அகற்றுவதோ கூடாது.

தாய் மரம் உருவாக்கப்பட்ட பிறகு பத்து வருடங்கள் கழித்து உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் பூமியையும் தாவரத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சொந்த இடம், பள்ளிகள், நிறுவனங்கள், ஆன்மீக ஸ்தலங்கள், ஆசிரமங்கள்,
பஞ்சாயத்தில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடம் என எதுவாகஇருந்தாலும் உங்களின் ஆளுமையில் பெற்றுக் கொடுங்கள். சிரம் பணிந்து பணி செய்ய காத்திருக்கிறோம்

நம்மை எப்பொழுதும் தாங்கி நிற்கும் பூமிக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம்?தாயாக தாங்கும் பூமிக்கு தாய் மரத்தால் நன்மை செய்வோம்.

தாய் மரம் உருவாக்க இணைந்து பணியாற்ற விரும்பினாலும்
இத்திட்டத்தை பற்றிய மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டாலும்
மின்னஞ்சல் செய்யுங்கள்

thaimaram@gmail.com
தொலைபேசி : +91 98422 10907

வாருங்கள் அனைவரும் இணைந்து தாய் மரம் உருவாக்குவோம்.


தாவரத்திற்காக
உங்கள் தாழ் பணியும்


ஸ்வாமி ஓம்கார்


இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி உதவுங்கள்.
உங்களின் உதவிக்கு எங்கள் நன்றிகள்.source:http://arivhedeivam.blogspot.com/2010/05/blog-post.html