Thursday, September 25, 2008

ஐன்ஸ்டீன் சொல்கிறார்.....

எனக்கென தனித் திறமைகள் எதுவும் கிடையாதப்பா. ஆனால் எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் என மட்டும் எனக்குத் தெரியும்.

அவ்வப்போது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் ஒரே கேள்வி. நான் பைத்தியமா? இல்லை மற்றவர்களா?

அறிவியல் அற்புதமானது தான். ஆனால் அதுவே பிழைப்பாய் இருக்காதவரை.

ரொம்ப முக்கியமானது என்னவென்றால் கேள்வி கேட்பதை நிறுத்த கூடாது.

கடவுள் முன் நாம் எல்லாரும் சம அளவு அறிவாளிகள்,சம அளவு முட்டாள்கள்.

கற்பனாவளம் அறிவைவிட மிக முக்கியமானதாக்கும்.

A-யை வெற்றி யென நான் கொண்டால் என் சூத்திரம் A = X + Y + Z
அதாவது இங்கு X உழைப்பையும் Y விளையாட்டையும் Z வாயை மூடிக்கொண்டு கம்னு இருத்தலையும் குறிக்கும்.

ஒரே நேரத்தில் யாரும் போருக்கும் சமாதானத்துக்கும் தயாராக முடியாது.

மூன்றாவது உலகப்போரில் எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமென எனக்கு தெரியாது.ஆனால் நான்காம் உலகப்போரில் கம்புகளும் கல்லுகளும் தான் பயன்படுத்தப்படும்.

ஆகாயமண்டலத்துக்கும் மனிதனின் முட்டாள் தனத்துக்கும் முடிவே இல்லை. முன்னதுக்கு முடிவிருந்தாலும் இருக்கலாம்.

தவறே செய்திராதவர்கள் புதுசாய் எதையும் முயலாதவர்கள் தாம்.

காதலில் விழுதலுக்கெல்லாம் புவி ஈர்ப்புவிசை காரணமாகாதையா.

உலகிலேயே புரிந்து கொள்ள முடியாத ரொம்ப கஷ்டமான ஒன்று இன்கம்டாக்ஸ்.

சிலவை எளிதாயிருக்க வேண்டும் தான். ஆனால் ரொம்ப ரொம்ப எளிதாய் அல்ல.

கடவுள் என்ன நெனைப்பில் இருக்கிறார்னு விளங்கிக்கனும், மற்றவையெல்லாம் விளக்கமாயுள்ளன.

நேரம் என ஒன்றிருக்க காரணம், எல்லாம் ஒரே சமயத்தில் நடக்காததால் தான்.

சூடேறிப்போயிருக்கும் ஓர் அடுப்பில் நீங்கள் ஒரு நிமிடமே கையை வைத்தாலும் அது ஒரு மணிநேரம் போல் தோன்றும். ஆனால் அழகான பெண்ணோடு ஒரு மணிநேரமாய் பேசினாலும் அது ஒரு நிமிடமாய் தான் தோன்றும். அதான் ரிலேடிவிட்டி.

உலகை புரிஞ்சிக்கவே முடியாத காரணம் அதை புரிந்துகொள்ள முடிவதுதான்.

கடவுள் உலகை படைத்த போது அவருக்கு வேறு எதாவது தெரிவு இருந்ததாவென அறிய ஆவல்.

வெற்றிகரமான மனிதனாவதைவிட மதிப்பிற்குரிய மனிதனாதல் வேண்டும்.

உதாரணமாய் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டவேண்டும். அதுவே வழிகாட்ட சிறந்த வழி.

நான் கற்றுக்கொள்ள அதிகம் தொல்லை கொடுப்பது என் கல்வியே.

நிஜம் ஒரு மாயை. ஆனால் பாருங்கள் அதுதான் நிலைத்திருக்கின்றது.

எதிர்காலத்தை பற்றி ரொம்ப யோசிப்பதில்லை. அது சீக்கிரமாய் வந்துவிடுகின்றதே.

-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)

ஏ‌ற்கனவே தெ‌ரி‌ந்ததுதா‌ன்,ஆனாலு‌ம் ஒரு முறை

இவை எ‌ல்லா‌ம் உ‌ங்களு‌க்கு ஏ‌ற்கனவே தெ‌ரி‌ந்ததுதா‌ன். ஆனாலு‌ம் ஒரு முறை ஞாபக‌ப்படு‌த்‌து‌‌கிறோ‌ம்.

தினமும் குடிக்கும் டீயின் அளவை கட்டுப்பாட்டில் வையுங்கள்.

காலையில் அதிகமான நீரை பருகுங்கள். இரவில் குறைவாக அருந்துங்கள்.

தினமும் இரண்டு வேலை காபி குடிப்பதை தவிருங்கள்.

இரவு 10 மணிக்கு தூங்கி காலை 6 மணிக்குள் எழுவதே சிறந்தது.

மாலை 5 மணிக்குப் பிறகு அளவுக்கு அதிகமான உணவை உண்ணாதீர்கள்.

மாத்திரைகளை குளிர்ந்த நீருடன் பருக வேண்டாம்.

மாத்திரை சாப்பிட்டதும் உடனடியாக படுக்கச் செல்ல வேண்டாம்.

சரியான தூங்கும் பழக்கம் இருப்பவர்களை முதுமை அண்டாது.

காலையில் நடை செல்ல முடியாதவர்களுக்கு மாலை 5 மணில் இருந்து 8 மணி வரை நடை செல்வதற்கு சிறந்த நேரமாகும்.

மின்னூட்டம் போட்டிருக்கும் செல்பேசியை பயன்படுத்த வேண்டாம்.

பொதுவாக செல்பேசியில் பேசுவதற்கு இடது பக்க காதைப் பயன்படுத்துங்கள்.

செல்பேசி காதுக் கருவியை அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது ஓய்வு கொடுங்கள்.

உட்கார்ந்தே செய்யும் வேலையாக இருந்தாலும் அவ்வப்போது எழுந்து சிறிது நேரம் நடந்து வாருங்கள்.

தொடர்ந்து கணினித் திரையை பார்த்தபடி இருப்பதும் கண்களின் தன்மையை பாதிக்கும். எனவே 20 நிமிடத்திற்கு ஒரு முறை பார்வையை மாற்றுங்கள்.

உண்ணாமல் இருப்பதையும், அதிகமாக உண்ணுவதையும் தவிருங்கள்.

மின்னஞ்சலைப் பற்றி மின்னஞ்சலில் வந்த ஒரு செய்தி இது.

வேலை இல்லாத இளைஞன் ஒருவன் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியாளர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தான்.


நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவனிடம் தரையை சுத்தம் செய்யச் சொன்னார்கள். அதிலும் அவன் தேர்ச்சி பெற்றான். இறுதியாக அந்நிறுவனத்தின் மேலதிகாரி அவனிடம், "உன்னுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடு. அதில் உனக்கான விண்ணப்பத்தை அளிக்கிறேன். அதனை பூர்த்தி செய்து என்று வேலைக்கு சேர்கிறாய் என்பதையும் குறிப்பிட்டு எனக்கு அனுப்பு" என்றார்.

இதற்கு பதிலளித்த இளைஞன், "என்னிடம் கணினியும் இல்லை. மின்னஞ்சலும் இல்லை" என்றான் வருத்தத்துடன்.

மேலதிகாரி, "என்ன மின்னஞ்சல் இல்லையா. யாருக்கு மின்னஞ்சல் இல்லையோ அவர்கள் தகுதியானவர்கள் இல்லை. தகுதியில்லாதவர்களுக்கு இங்கு வேலை இல்லை" என்று இளைஞனை அனுப்பிவிட்டார்

அந்த இளைஞனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தன்னிடம் உள்ள 10 ரூபாயை வைத்து என்ன செய்வது, ஒரு மின்னஞ்சலை உருவாக்க இயலாதே என்று கவலையுற்றான்.

திடீரென அவனுக்கு ஒரு திட்டம் உதயமானது. அதாவது மொத்த விற்பனை சந்தைக்குச் சென்று அங்கு 10 ரூபாய்க்கும் தக்காளி வாங்கினான். அதனை வீடு வீடாகச் சென்று விற்றான். 2 மணி நேரத்தில் அவன் போட்ட முதலீடு இரண்டு மடங்காக ஆனது.

உடனே 20 ரூபாய்க்கும் தக்காளி வாங்கி மீண்டும் வீடு வீடாகச் சென்று விற்றான். 40 ரூபாய் கைகளில் கிடைத்தது. இதையே மீண்டும் செய்ததில் 80 ரூபாய்களை சம்பாதித்தான்.

அப்போதுதான் அவனுக்கு அந்த எண்ணம் தோன்றியது. ஏன் தினமும் இப்படியே செய்து லாபம் ஈட்டக் கூடாது என்று எண்ணினான்.

மறுநாள் அதிகாலையிலேயே புறப்பட்டு தக்காளிகளை வாங்கி வீடு வீடாக விற்றுவிட்டு மாலையில் அவன் வீடு திரும்பும் போது அவன் போட்ட முதல் தொகையை விட பல மடங்கு பணம் அவன் கைகளில் இருக்கும்.

இப்படியே நாட்கள் செல்ல செல்ல தக்காளி விற்பதற்கு ஒரு தள்ளு வண்டியை வாங்கினான். பின்னர் அதுவே டிரக்காக மாறியது. பின்னர் தக்காளியை பதமாக வைத்து எடுத்துச் செல்லும் விற்பனை வண்டியை வாங்கினான்.

5 ஆண்டுகளில் அவன் மொத்த வியாபாரத் தொழிலில் முக்கிய அதிபராக விளங்கினான்.

மிகப்பெரிய தொழிலதிபராக ஆன பிறகு தனது குடும்பத்திற்கான ஒரு பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்க எண்ணி, ஆயுள் காப்பீட்டில் சேர விரும்பினான்.

ஆயுள் காப்பீட்டு தரகரை தொடர்பு கொண்டு பேசினான். அப்போது, குடும்ப உறுப்பினர் விவரம், தொகை விவரம் போன்றவற்றுடன் அவரது மின்னஞ்சல் முகவரியையும் தரகர் கேட்டார்.

அப்போது அந்த இளைஞன், "என்னிடம் மின்னஞ்சல் முகவரி இல்லை" என்று பதிலளித்தார்.

அதிர்ச்சி அடைந்த தரகர், "என்ன உங்களிடம் மின்னஞ்சல் முகவரி இல்லையா. இவ்வளவு பெரிய ஆளாக இருக்கின்றீர்கள். நீங்கள் மின்னஞ்சல் வைத்திருந்தால் இன்னும் எப்படி இருந்திருப்பீர்கள் என்று கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்?" என்றான்.

இளைஞன் தான் கடந்து வந்த வாழ்க்கையை ஒரு நிமிடம் புரட்டிப் பார்த்துவிட்டு புன்னகையுடன் பதிலளித்தார், "ஆம், தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் உதவியாளனாக பணியாற்றிக் கொண்டிருந்திருப்பேன்."

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு

தினமும் எட்டு மணி நேரத்துக்கு மேல் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் கண்களைப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் உருவாகி வருகிறது. கண் நிபுணர்கள், கீழ் கண்ட பிரச்னைகளுடன் கம்ப்யூட்டரில் பணி புரிபவர்கள் சிகிச்சை கோரி வருவதாகத் தெரிவித்துள்ளனர். கண் எரிச்சல், நமைச்சல், உலர்ந்து போதல், சிவப்பாதல், அழுத்தம் ஆகியவற்றுடன் கழுத்து வலி. இந்தப் பிரச்னைகளை "கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்' என்று வகைப் படுத்துகிறார்கள். இந்த சின்ட்ரோம் மூன்று வகையாகப் பிரிக்கத் தக்கது.1. மெல்லியது 2. இடைநிலைப்பட்டது 3. கொடியது இதனால் உடனடியாக பார்வை பறிபோய்விடாது என்பதால், இந்த விஷயத்தில் யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. சாப்ட்வேர் கம்பெனிகள் கம்ப்யூட்டர் திரையில் பிரதிபலிப்பு ஏற்படாமல் இருக்கு கம்ப்யூட்டரில் இருந்து வெளிப்படும் வெளிச்ச அளவையும் அந்த அறையின் வெளிச்சத்தையும் தரப்படுத்தி வைத்துக் கொள்கின்றனர். கம்ப்யூட்டரில் பணி புரிபவர்கள் இது போன்ற கட்டுக்குள் இருக்கும் ஒளி அளவுடன் பணி செய்ய வேண்டும். கரு விழிக்கு போதுமான ரத்தம் பாயாததால் தான் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. கண்களை மூடித் திறப்பதால் கரு விழிக்கு போதுமான ரத்தம் கிடைக்கிறது. அதனால் தேவையான ஆக்சிஜனையும் இது பெற்றுக் கொள்கிறது. ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 12 முறையாவது விழிகளை மூடித் திறக்க வேண்டும். கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது இது குறைவதால் பிரச்னை ஏற்படுகிறது. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை ஓய்வெடுத்துக் கொண்டு 20 அடி தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கண் உலர்வதை தடுத்து நிறுத்த முடியும். கம்ப்யூட்டர் திரை குறைந்தது 50 செ.மீ. தொலைவில் இருக்க வேண்டும். நம் விழிகளின் உயரத்துக்கு குறைவான உயரத்தில் திரை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் யோசனை சொல்கின்றனர்.